Dogs
Dogs Img Credit: Country living magazine
பசுமை / சுற்றுச்சூழல்

ஒரு நாயின் விலை 12 கோடியா? அப்பாடியோவ்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ஒரு நாயின் விலை 12 கோடி ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?

  • ஒரு திபெத்திய மாஸ்டிஃப் நாயானது சீனாவில் 12 கோடிக்கு விற்கப்பட்டது. சீனாவில் நடந்த கண்காட்சியில் ஒரு வயதான மாஸ்டிஃப் நாய்குட்டியை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளார் ஒருவர்.

  • இவை திபெத், லடாக் போன்ற உயரமான இமயமலை பகுதிகளில் வாழக்கூடியவை. இது மிகவும் பழமையான நாய் இனங்களில் ஒன்றாகும். திபெத்திய மாஸ்டிஃப் நாய்க்குட்டிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் பிறக்கின்றன. இவை கருப்பு, பழுப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன. இதன் ஆயுட்காலம்10 - 16 ஆண்டுகள் வரை ஆகும்.

  • முதலில் இந்த நாய்கள் புத்த மதத் துறவிகள் மற்றும் திபெத்தின் துறவிகளை கரடிகள், ஓநாய்கள் மற்றும் பனி சிறுத்தைகள் போன்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்பட்டன.

Tibetan Mastiff dog
  • திபெத்தின் நாய்கள் இந்தியாவில் காணப்படும் நாய்களைவிட இரண்டு மடங்கு பெரிய தலைகள் மற்றும் உடல் முழுவதும் முடிகள் கொண்டவை.

  • இவை வளர்க்கப்படும் எஜமானர்களால் பகலில் சங்கிலியால் கட்டப்பட்டு இரவில் வீட்டைக் காக்க விடுவிக்கப்படுகின்றன.

  • இவை 1980ஆம் ஆண்டு முதல் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகின்றன. 2008ல் முதல்முறையாக நாய் கண்காட்சியில் இந்த நாய் பங்கு பெற்றது.

  • இந்த வகை நாய்கள் எல்லா இடங்களிலும் இருக்காது. பாண்டா கரடிகளைப் போல குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் வாழும்.

  • இமயமலை அடிவாரங்களில் வாழும் இவை அங்கு நிலவும் கடுமையான குளிரை தக்க வைத்துக்கொள்ள முடிவதால் பழங்காலம் தொட்டே சீனர்கள் இதனை வேட்டைக்காகவும், பாதுகாப்புக்காகவும் வளர்த்து வருகின்றனர்.

  • நன்கு வளர்ந்த திபெத்திய மாஸ்டிஃப் சுமார் 60-70 கிலோ எடையும் 66 செ.மீ உயரமும் கொண்டிருக்கும்.

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT