A water-saving wonder tree to beat the summer heat
A water-saving wonder tree to beat the summer heat https://ibctamilnadu.com
பசுமை / சுற்றுச்சூழல்

கோடை வெப்பத்தை சமாளிக்க தண்ணீரை சேமிக்கும் அதிசய மரம்!

சேலம் சுபா

த்தனை தொழில் நுட்பங்களை மனிதர்கள் கண்டுபிடித்தாலும் இயற்கையின் அதிசயங்கள் முன் அவை தோற்றுத்தான் போகும். அப்படி ஒரு அதிசயம்தான் தண்ணீரை தன்னுள்ளே சேமித்து வைத்துக்கொள்ளும் மரங்களும்.

தண்ணீரை தனக்குள் சேமித்து வைக்கும் அதிசய மரம் ஆந்திராவின் மலைத் தொடர் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்திற்காக தனக்குள் தண்ணீரை சேமித்து வைத்த அந்த அதிசய மரத்தை ஆந்திர வனத்துறையினர் உறுதி செய்து தற்போது அந்த செய்தியும் புகைப்படமும் இது தொடர்பான  வீடியோக்களும் அதிகம் இணையதளத்தில் வலம் வருகின்றன.

ஆந்திர மாநிலம், கோதாவரி பகுதியில் உள்ள பாபிகொண்டா என்ற வனப்பகுதியில் பழங்குடியின மக்களான கோண்டா ரெட்டி எனும் பிரிவினர் வசிக்கின்றனர். அலுரி சீதாராம ராஜூ என்ற மாவட்டத்தின் பகுதியில் பாபிகொண்டாவின் தேசிய பூங்காவில் வசிக்கும் இவர்கள் மலைத்தொடரில் உள்ள அரிய மூலிகைகள், மரம், செடிகள் பற்றிய  தகவல்களை கண்டு அறிந்து தங்கள் சந்ததியினருக்கு அறிமுகம் செய்கின்றனர்.

சமீபத்தில் தண்ணீர் தரும் மரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வனத்துறையிடம் அம்மக்கள் கூற, அவர்கள் தேசியப் பூங்காவுக்கு சென்றனர். அங்கு காணப்பட்ட இந்திய லாரல்  என்ற அரிதான மரத்தின் ஒரு பகுதியில் உள்ள மரப்பட்டைகளை வெட்டினர். வெட்டப்பட்ட மரத்திலிருந்து தண்ணீர் பீச்சியடித்தது கண்டு வனத்துறை அதிகாரிகள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இருபது லிட்டர் அளவுக்கு தண்ணீர் வெளிவந்தது, இந்த வகை அரிய  மரங்கள், தண்ணீர் அதிகம் கிடைக்கும் நேரத்தில்  தன்னுள் சேமித்து வைக்கும் திறனைக் கொண்டிருந்ததை உறுதி செய்தனர்.

‘‘நல்லமாடி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்திய லாரல் மரங்கள், வறண்ட கோடைக்காலத்தில் கடுமையான மணம் மற்றும் புளிப்பு சுவை கொண்ட நீரை சேமித்து வைக்கின்றன. காட்டு மரங்களில் காணப்படும் அற்புதமான விஷயம் இது" என்று இம்மரத்தை ஆராய்ந்த வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அழிந்து வரும் இந்த அரிய மரத்திலிருந்து வரும் தண்ணீர் மருத்துவ குணம் கொண்டதாகக் கூறுகின்றனர். இதனால் இம்மரத்தை மக்கள் வெட்டக்கூடாது என்றும், இந்த மரங்களையும், சந்தனம் மற்றும் செம்மரத்தை போல் சமூக விரோதிகளிடமிருந்து  பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு  கண்காணிப்புப்பணிகளை தீவிரப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த மரங்கள் மத்திய தரைக்கடல் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. மரத்தின் அறிவியல் பெயர்  Ficus Microcarpa . இது ஒரு வெப்ப மண்டல அல்லது துணை வெப்ப மண்டல மரமாக அறியப்படுகிறது. இந்த வகை மரங்கள் பெரும்பாலும் ஆசியா, மேற்கு பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. தனது பொதுவான பெயர்களாக விரிகுடா மரம் அல்லது வெறுமனே லாரல் என்று இந்த மரங்கள் அழைக்கப்படுகின்றன. இதில் உள்ள அடர்த்தியான இலைகள்  பளபளப்பான பச்சை ஈட்டி போல் அழகாக காணப்படுவதால் இதனை அங்கு  பெரும்பாலும் அலங்கார மரமாகவே  வளர்க்கிறார்கள். இம்மரத்தின் பழங்கள் பறவைகள் பசிக்கு உதவுவதால் பறவைகளின் வாழ்விடமாகவும் இது உள்ளது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT