hummingbird Image Credits: https://birdfact.com
பசுமை / சுற்றுச்சூழல்

ஹம்மிங் பறவைகளின் சிறப்பியல்புகள்!

செப்டம்பர் 7, ஹம்மிங் பறவைகள் தினம்

ஆர்.ஐஸ்வர்யா

லகின் மிகச்சிறிய பறவைகள் ஹம்மிங் பேர்ட். மிக அழகான பறவைகளான இவை அமெரிக்காவில் காணப்படுகின்றன. பல பறவைகள் மூன்று முதல் ஐந்து அங்குல நீளமும், இரண்டிலிருந்து 20 கிராம் மட்டுமே எடை கொண்டவை.

பெயர்க்காரணம்: இதன் சிறகுகள் மிகவும் வேகமாக படபடக்கும் தன்மை கொண்டவை. வினாடிக்கு 50 முதல் 80 முறை வரை அவை தங்கள் சிறகுகளை அசைத்து வட்டமிடுகின்றன‌‌. அப்போது ஒருவிதமான ஹம்மிங் சத்தத்தை அவை வெளியிடுவதால், இவை ஹம்மிங் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.

பறக்கும் திறன்: அளவில் சிறியதாக இருந்தாலும் இவை மிக வேகமாகப் பறக்கக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 30 மைல்களைக் கடக்கும் திறன் பெற்றவை. பிற பறவைகளுக்கில்லாத சிறப்பியல்பு ஹம்மிங் பறவைகளுக்கு உண்டு. எட்டு விதமாக தங்கள் இறக்கைகளை வேகமாக அசைத்து இவை வட்டமிடும்.

இந்தப் பறவைகள் முன்னோக்கி, பின்னோக்கி மற்றும் தலைகீழாக கூட பறக்கும் திறன் படைத்தவை. இந்த பன்முகத்தன்மை அவற்றை மிகவும் திறம்பட செயல்பட வைக்கிறது. இந்தக் குணங்களால் ஹம்மிங் பறவைகள்,  பறவை இனங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் சுறுசுறுப்பான பறவைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

வண்ணச்சிறகுகள்: ஹம்மிங் பறவைகளின் இறக்கைகள் இனத்தைப் பொறுத்து நிறத்தில் பரவலாக மாறுபட்டிருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, ஊதா அல்லது தங்க நிறங்களின் கலவையில் வண்ணமயமானதாக இருக்கலாம். இவற்றின் இறகுகளில் உள்ள நுண்ணிய பிளேட்லெட்டுகள் ஒளியை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறத்தில் இருக்கும். மேலும் அவை அவற்றின் தலையின் அளவைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் பெரிதாக இருக்கும் அவற்றின் பார்வை மிகவும் கூர்மையானது.

நினைவாற்றல்: இவை சிறந்த நினைவாற்றல் கொண்டவை. தனிப்பட்ட பூக்கள் மற்றும் தீவனங்களின் இருப்பிடங்களை நினைவில் வைக்கும் திறன் பெற்றவை. குறிப்பிட்ட மலர்களில் அதிக தேன் இருக்கும் என்பதை நினைவில் வைத்து, அவற்றை நாடிச்செல்லும்.

உணவு: மிக வேகமாக இயங்குவதால் இவற்றுக்கு அதிக அளவில் உணவு தேவை. ஆயிரக்கணக்கான மலர்களை ஒரே நாளில் தேடிச்சென்று அதில் இருக்கும் தேனை உறிஞ்சுகின்றன. இவற்றின் நீண்ட அலகுகள் தேனை உறிஞ்ச ஏற்ற வகையில் இருக்கின்றன. இவற்றின் பிளவுபட்ட நாக்குகள் தேனை உறிஞ்சும் வகையில் உள்ளன. ஒரு நொடியில் 13 முறை இவற்றால் தேனை உறிஞ்ச முடியும்.

அதிவேக இதயத்துடிப்பு: இவற்றின் இதயத்துடிப்பு மிகவும் அதிசயமானது. இவை பறக்கும்போது ஒரு நிமிடத்தில் 1200 முறை துடிக்கக் கூடியது இவற்றின் இதயங்கள். ஆனால், அவை ஓய்வில் இருக்கும்போது இந்த அளவு மாறுபடுகிறது.

மைக்ரேஷன்: நீண்ட தூரம் பறந்து செல்லக் கூடியவை இந்த பறவைகள். மைக்ரேஷன் காலத்தின்போது, இவை 500 மைல்கள் வரை கூட பறக்கக் கூடியவை.

ஹம்மிங் பேர்ட் தினம்: 360 வகையான ஹம்மிங் பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை பல நூற்றாண்டுகளைக் கடந்து வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரணமாக வட அமெரிக்காவில் இருக்கும் பூங்காக்களில், தோட்டங்களில் இவை வசிக்கின்றன. அங்கே மக்கள் இந்த பறவைகளுக்கு சர்க்கரை கலந்த தண்ணீரை அருந்த வைக்கிறார்கள். செப்டம்பர் ஏழாம் தேதி அன்று அமெரிக்காவில் ஹம்மிங் பேர்ட் தினம் கொண்டாடுகிறார்கள். இந்த சிறிய மிக அரிதான அழகான பறவையை கவனமாக பாதுகாப்பதன் அவசியத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT