Dolphins 
பசுமை / சுற்றுச்சூழல்

மனிதர்களை நேசிக்கும் கடல் விலங்கு எது தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

டால்ஃபின்கள் பல தனித்துவமான பண்புகள் மற்றும் நடத்தைகள் கொண்ட கண்கவர் உயிரினங்கள். டால்ஃபின்கள் பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

 புத்திசாலித்தனம்: பூமியில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாக டால்ஃபின்கள் கருதப்படுகின்றன. அவற்றின் உடல் அளவோடு ஒப்பிடும்போது இவற்றின் மூளை பெரியது. இவை மிமிக்ரி செய்யும் திறன் கொண்டவை. இவற்றால் தங்களை கண்ணாடியில் அடையாளம் காண முடியும். இது விலங்குகளிடையே ஒரு அரிய பண்பாகும்.

விளையாட்டுத்தனம்: டால்ஃபின்கள் நம்ப முடியாத அளவு விளையாட்டுத்தனமானவை. அவை அடிக்கடி தண்ணீரிலிருந்து குதித்து, அலைகளில் அலைந்து கடற்பாசி அல்லது பொம்மைகள் போன்ற பொருட்களை வேடிக்கைக்காக தூக்கி எறிந்து விளையாடும். அவற்றின் சமூக பிணைப்பில் விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாகும்.

சமூகக்கட்டமைப்புகள்: டால்ஃபின்கள் பாட்ஸ் எனப்படும் சமூக குழுக்களில் வாழ்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான டால்ஃபின்கள் வரை இருக்கலாம். அவை தங்களுக்குள் வலுவான சமூகப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன. விசில்கள் மற்றும் உடல் மொழிகளை பயன்படுத்தி ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன.

மெதுவான தூக்கம்: டால்ஃபின்களால் பாதி விழித்திருக்கும்போதே தூங்க முடியும். அவற்றின் மூளையின் ஒரு அரைக்கோளம் ஓய்வெடுக்கிறது. மற்றொரு அரைக்கோளம் சுவாசத்தை கட்டுப்படுத்தவும் தங்களை வேட்டையாடுபவர்களை கண்காணிக்கவும் பயன்படுகிறது. இது மெதுவான தூக்கம் என்று அழைக்கப்படுகிறது.

அனுதாப குணம்: ஏதாவது ஒரு டால்ஃபினுக்கு உடலில் காயம் பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ மற்ற டால்ஃபின்கள் அனுதாபத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றை தங்களுடன் சேர்த்துக்கொண்டு நீந்துவதன் மூலம் அந்த டால்பின்களுக்கு தண்ணீரின் மேற்பரப்பில் காற்று கிடைக்க வழி செய்கின்றன.

ஆயுள், நீந்தும் திறன்: சில வகையான டால்ஃபின்கள் 50 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. பாட்டில்நோஸ் டால்ஃபின்கள் 40லிருந்து 50 ஆண்டுகளில் காடுகளில் வாழ்கின்றன. அனைத்து டால்பின்களும் கடல்களில் வாழ்வதில்லை. அமேசான் நதி டால்ஃபின் மற்றும் கங்கை நதி டால்ஃபின் போன்ற நன்னீர் வாழ்விடங்களில் வாழும் நதி டால்ஃபின்களும் உள்ளன. இவை இருண்ட ஆழமற்ற ஆறுகளுக்கு ஏற்றவை மற்றும் நீண்ட மூக்கு போன்ற தனித்துவமான உடல் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை வேகமான நீச்சல் வீரர்கள். மணிக்கு முப்பது மைல்கள் வரை நீந்தும்.

மீன் வேட்டை: உலகின் சில பகுதிகளில் டால்ஃபின்கள் வேட்டையாடுவதில் மனிதர்களுடன் ஒத்துழைக்கின்றன. பிரேசிலில்,  மீன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து டால்ஃபின்கள் மீனவர்களுக்கு வலைகளை வீசச் சொல்லி சிக்னல் தருகின்றன. பின்னர் அவர்கள் வலைவீசி மீன் பிடித்ததும் வலையில் இருந்து தப்பிக்க பார்க்கும் மீன்களை இவை பிடித்து உண்கின்றன.

அற்புதமான நினைவாற்றல்: டால்பின்களுக்கு சிறந்த நீண்டகால நினைவாற்றல் உண்டு. பல தசாப்தங்களாக அவை பார்த்திராத மற்ற டால்ஃபின்களின் விசில்களை வைத்து அவற்றை அடையாளம் காண முடியும். சில டால்ஃபின்கள் கடற்பாசிகளை கடலுக்கு அடியில் தேடும்போது தங்கள் மூக்குகளை பாதுகாக்கும் கருவிகளாக பயன்படுத்துகின்றன.

உணவுகள்: டால்ஃபின்கள் மீன், ஸ்க்விட் மற்றும் ஓட்டு மீன்களை உண்ணும். அதே வேளையில் கொலையாளி திமிங்கலங்கள் என்று அழைக்கப்படும் ஓர்கா டால்ஃபின்கள் கடல் பறவைகள் மற்றும் பிற கடல் பாலூட்டுகளை வேட்டையாடி உண்கின்றன.

பிணைப்பு: டால்ஃபின்கள் மனிதர்கள் மீது மிகுந்த பிணைப்பு கொண்டுள்ளன. இவை நீச்சல் வீரர்களை மீட்பது, படகுகளை சுற்றி விளையாடுவது மற்றும் மனிதர்களைச் சுற்றி பாதுகாப்பு வட்டங்களை அமைத்து சுறாக்களிடமிருந்து அவர்களை காப்பாற்றுவது என்று மனிதர்களிடையே ஒரு வலுவான பிணைப்பை கொண்டுள்ளன. எனவே டால்ஃபின்கள் மனிதர்களுக்கு பிரியமான, உகந்த கடல் விலங்குகளாக கருதப்படுகின்றன.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT