பசுமை / சுற்றுச்சூழல்

காப்பீடு இல்லாததால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம்!

க.இப்ராகிம்

ம்பா மற்றும் குறுவை சாகுபடி காலங்களில் பெய்ய வேண்டிய மழை சரியான அளவில் பெய்யாததாலும், கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய நீர் பெருமளவில் தடுக்கப்பட்டதாலும், குறிப்பாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இல்லாததாலும் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றனர்.

இந்தியாவில் அதிக அளவில் விவசாய விளைப் பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கியமான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதிலும் குறிப்பாக, குறுவை, சம்பா போன்ற நெடுங்கால பயிர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் காலங்களாகும். மேலும், இந்தக் குறிப்பிட்ட காலங்களில் அதிக அளவில் விவசாயிகள் இன்னலை சந்திக்க வேண்டிய சூழலும் நேரிடுகிறது.

மற்ற நேரங்களில் பயிர் காப்பீடு வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, மிக முக்கியமான காலமான குறுவை சாகுபடி காலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்கவில்லை. மத்திய அரசு, ‘பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்’ மூலம் நிதியை ஒதுக்கக் கூறியபோது கூட தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தேவையில்லை என்று தெரிவித்து விட்டது. இதனால் கடந்த 2021, 22, 23 ஆகிய மூன்று ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை.

இது குறித்து விவசாயிகள் கூறியபோது, “நடப்பு ஆண்டு குறுவையில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் இருந்து தேவையான அளவு தண்ணீர் வராததும், பருவ மழை போதிய அளவு இல்லாததன் காரணமாக பயிர்கள் பெருமளவில் காய்ந்து விட்டன. ஒருசில விவசாயிகள் போர்வெல் மூலமாகவும், சொட்டு நீர் பாசனங்கள் மூலமாகவும் சாகுபடி மேற்கொண்டு இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் வைத்த பயிர்கள் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் கருகி விட்டன. இந்த நிலையில், பயிர் காப்பீடு இருந்திருந்தால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பயிர் காப்பீடு வழங்காமல் இருந்து வருகிறது. மத்திய அரசு முன்வந்து கேட்டும் கூட தமிழ்நாடு அரசு பயிர் காப்பீட்டை மறுத்து இருப்பது விவசாயிகளை நஷ்டம் அடையச் செய்திருக்கிறது” என்று தெரிவிக்கின்றனர்.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

சிறுகதை - தன்மானக் கவிஞன் ராஜாமணி!

SCROLL FOR NEXT