டைனோசர்களை விட பழைமையான உயிரினங்கள் ஜெல்லி மீன்கள். அவை 500 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் உள்ளன. ஜெல்லி மீன்களின் சிறப்பியல்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மூளை, இதயம் இல்லை: ஜெல்லி மீன்களுக்கு மத்திய நரம்பு மண்டலம், மூளை மற்றும் இதயம் இல்லை. அவை ஒரு எளிய நரம்பு வலை மூலம் இயங்குகின்றன. இவற்றுக்கு எலும்புகளும் இல்லை. நீந்துவதற்கு புனல் போன்ற அமைப்பை இவை பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு மூளை இல்லை என்றாலும் புத்திசாலித்தனமாகவும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் இயல்புடையவை.
நீந்தும் தன்மை: தண்ணீரிலேயே இருந்தாலும் இவை சக்தி வாய்ந்த நீச்சல் வீரர்கள் அல்ல. சுறுசுறுப்பாக நீந்துவதை விட கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப நீந்தும் தன்மையுடையவை. அவை தங்கள் மணி வடிவ உடலை சுருக்கி ஓய்வு எடுப்பதன் மூலமே தங்களைத் தாங்களே இயக்க முடியும்.
இருட்டில் ஒளிரும் தன்மை: சில ஜெல்லி மீன்களுக்கு இருட்டில் ஒளிரும் அமைப்பு உண்டு. தங்கள் உடலில் ஒரு ரசாயன எதிர்வினை மூலம் இந்த ஒளியை உற்பத்தி செய்து கொண்டு இருட்டில் ஒளிர முடிகிறது. பச்சை அல்லது நீல நிற ஒளியை இவை வெளியிடுகின்றன. இவற்றின் உடலில் உள்ள பயோலுமினசென்ட் உறுப்புகள்தான் பச்சை அல்லது நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. இதன் மூலம் தங்களை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றன.
ராட்சத ஜெல்லி: ஜெல்லி மீன்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன. சிறிய பட்டாணி அளவிலான ஜெல்லி மீன்கள் முதல் பரந்த அளவில் உள்ள பெரிய இனங்கள் வரை உள்ளன. ஹேர் ஜெல்லி என்கிற ஒரு மாபெரும் இனம் உள்ளது. திமிங்கலத்தை விட நீளமான உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. 120 அடிக்கு மேல் நீளமான உடலைக் கொண்டது. இது ராட்சத ஜெல்லி என்று அறியப்படுகிறது.
உணவு: ஜெல்லி மீன்கள், சிறிய மீன்கள் மற்றும் பிற நுண்ணிய உயிரினங்களை உண்கின்றன. சில சமயங்களில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை பெருகும்போது அவை உள்ளூர் மீன் வளத்தை பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.
அதிசய ஜெல்லி மீன்: அழியாத ஜெல்லி மீன் என்று அழைக்கப்படும் ஒரு வகை மீன் முதிர்ச்சியடைந்த பிறகு தனது இளம் வயதுக்கு திரும்பும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, இது மரணத்தைக் கூட தவிர்க்கும் என்று சொல்கிறார்கள்.
அழகும் ஆபத்தும்: பார்வைக்கு அழகாக இருக்கும் ஜெல்லி மீன்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த குச்சி போன்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. பல்வேறு கலாசாரங்களில் கலை மற்றும் இலக்கியங்களில் ஜெல்லி மீன்கள் தங்கள் அழகு, மீள் தன்மை மற்றும் கடலின் மர்மங்களை பிரதிபலிப்பு பிம்பங்களாகக் கருதப்படுகின்றன.
அழியாத ஜெல்லி மீன்: ‘அழியாத ஜெல்லி மீன்’ என்றும் அழைக்கப்படும் டர்ரிடோப்சிஸ் டோஹர்னி, முதிர்ச்சியடைந்த பிறகு அதன் இளம் வயதிற்குத் திரும்பும் திறனைக் கொண்டுள்ளது. வயதான தோற்றம் மாறி மீண்டும் இளமையான தோற்றம் பெறும் இவை, மரணத்தைக் கூட நெருங்க விடாது என வேடிக்கையாகச் சொல்வார்கள்.