Aquarium fishes 
பசுமை / சுற்றுச்சூழல்

மிகவும் விலையுயர்ந்த அக்வாரியம் வகை மீன்கள்!

A.N.ராகுல்

மீன் ஆர்வலர்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டு மீன்தொட்டிகளின் அழகையும் தங்கள் கௌரவத்தையும் அதிகரிக்க தனித்துவமான மற்றும் கவர்ச்சியான மீன்களை வைக்க விரும்புகின்றனர். இவற்றில், சில மீன் இனங்கள் அவற்றின் அதிர்ச்சியூட்டும் தோற்றத்திற்காக மட்டுமல்ல, அவற்றின் அதிக விலைக்கும் உலகளவில் தனித்து நிற்கின்றன. அப்படி, உலகில் காணப்படும்  மிக விலையுயர்ந்த வீட்டு மீன்கள், அவற்றின் அதிக மதிப்புக்கான காரணங்கள் மற்றும் இந்த மீன் இனங்களை வீட்டில் வைத்திருப்பதன் நன்மைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வோம்.

விலையுயர்ந்த அக்வாரியம் மீன்கள்:

1. பிளாட்டினம் அரோவானா (Platinum Arowana): பிளாட்டினம் அரோவானா பெரும்பாலும் உலகின் மிக விலையுயர்ந்த அக்வாரியம் மீனாக  கருதப்படுகிறது. இதன் விலை $400,000 (இன்றைய இந்திய மதிப்பில் 3 கோடிக்கு மேல்) ஆகும். இது  ஒரு அரிய வகை மீன். உலோக வெள்ளை நிறம் மற்றும் அதன் கம்பீரமான தோற்றத்திற்காக, இதற்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது . பல கலாச்சாரங்களில் பிளாட்டினம் அரோவானா மீன் இனங்களை அதிர்ஷ்டம் மற்றும் கௌரவத்தின் அடையாளமாக கருதுவது, அதன் மதிப்பை மேலும் உயர்த்துகிறது.

2. பிரெஷ் வாட்டர் போல்கா டாட் ஸ்டிங்ரே(Freshwater Polka Dot Stingray): மீன் ஆர்வலர் களால் மிகவும் விரும்பப்படும் மற்றொரு இனம் ஆகும், இதன் விலை $100,000 (இன்றைய இந்திய மதிப்பில் 83 லட்சத்துக்கு மேல்) வரை இருக்கும். வெள்ளை போல்கா புள்ளிகளால் (white polka dots) அலங்கரிக்கப்பட்ட அதன் தனித்துவமான கறுப்பு உடல், மீன் தொட்டியில் நீந்தும் போது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்குமாம். இந்த இனத்தின் அரிதான தன்மை மற்றும் அதன் வசீகரிக்கும் தோற்றம் அதன் அதிக விலைக்கு காரணமாக கருதப்படுகிறது.

3. பெப்பர்மின்ட் ஏஞ்சல் ஃபிஷ் (Peppermint Angelfish): சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகளுடன் இருக்கும் மற்றொரு விலையுயர்ந்த மீனாகும். இது பெரும்பாலும் சுமார் $30,000க்கு (இன்றைய இந்திய மதிப்பில் 25 லட்சத்துக்கு மேல்) விற்கப்படுகிறது. இந்த பிரமிக்க வைக்கும் மீன் மிகவும் அரிதானது. அதற்கேற்றார் போல் சந்தையில் மிகக் குறைவான அளவிலேயே கிடைக்கின்றன.

4. மாஸ்க் ஏஞ்சல்ஃபிஷ்(Masked Angelfish): தனித்துவமான கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திற்காக அறியப்பட்ட இந்த மீன், $20,000 (இன்றைய இந்திய மதிப்பில் 16 லட்சத்துக்கு மேல்) வரை விற்கப்படுகிறது. இது  ஒரு அரிய வகை மீன். கடுமையான மீன்பிடி விதிமுறைகள் காரணமாக அதைப் பிடிப்பதில் உள்ள சிரமங்கள் அதன் தரத்தை சற்று கூட்டுகிறது.

இந்த வகை அக்வாரியம் மீன்களை வீட்டில் வைத்திருப்பதன் நன்மைகள்

  • அழகியல் மேம்பாடு: இந்த மீன்கள் உங்கள் வீட்டு அழகை மேம்படுத்தி, விருந்தாளியாக வரும் ஈர்க்கும் விதமாக அமையும்.

  • மன அழுத்த நிவாரணம்: மீன் நீந்துவதைப் பார்ப்பது ஒரு அமைதி மற்றும் நிம்மதியைத் தரும் அனுபவமாக இருக்கும். இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது.

  • குறியீட்டு மதிப்பு (Symbolic Value): சில கலாச்சாரங்களில், அரோவானா(Arowana) போன்ற சில இனங்களை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

  • எனவே, உலகின் தலைசிறந்த மற்றும் விலையுயர்ந்த வீட்டு மீன்வளங்களை நம்மால் வாங்க முடியா விட்டாலும், முடிந்த வரை சில சிறிய மீன்களையாவது பராமரித்து அதன் நன்மைகளை பெறுவோம்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT