Nature loving Indians  Imge credit: Maria's Farm Country Kitchen
பசுமை / சுற்றுச்சூழல்

இயற்கையை நேசிக்கும் இந்தியர்கள்!

பாரதி

மக்களுடன் நேரத்தைக் கழிக்கும் மனிதர்களைவிட இயற்கையுடன் நேரத்தைக் கழிக்கும் மனிதர்களே எப்போதும் மிக உற்சாகமாக இருப்பார்களாம். அவர்களுக்கு மற்றவர்களைக் காயப்படுத்தவும் தெரியாது. இயற்கை காட்சிகளிலிருந்து விலங்குகள், தாவரங்கள், ஒட்டுமொத்த இயற்கை சூழல்வரை அவர்கள் விரும்புவார்கள். இயற்கையை முழுவதுமாக நேசிப்பவர்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் கவனம் திரும்பாது.

அந்தவகையில் இயற்கையை நேசித்த 7 இந்தியர்களைப் பற்றி பார்ப்போம்.

சலீம் அலி:

சலீம் அலி

`இந்தியாவின் பறவை மனிதர்` என்றழைக்கப்படும் இவர் 1896ம் ஆண்டு பிறந்து 1987ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவர் பறவையியல் பற்றி படித்தவரவார். சலீம் அலி பறவைகளின் ஆராய்ச்சியிலும் பறவைகளின் பாதுகாப்பிலும் பெரிய பங்கு வகித்தார். மேலும் இவர் பறவைகளைக் காக்கும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் பறவைகள் சரணாலையம்  தோன்றுவதற்கு காரணமானார்.

சுந்தர்லால் பகுகுணா:

சுந்தர்லால் பகுகுணா

சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலரான இவர் 1927ம் ஆண்டு பிறந்து 2021ம் ஆண்டு இயற்கை எய்தினார். சுந்தர்லால் காடுகளைப் பாதுகாப்பதில் தன் வாழ்க்கை முழுவதும் போராடினார். அந்தவகையில் சுற்றுச்சூழல் இயக்கமான சிப்கோ இயக்கத்தில் பெரிய பங்கு வகித்து மிகவும் பிரபலமானார். இந்த இயக்கத்தின் மூலம் காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டது.

மேதா பட்கர்:

மேதா பட்கர்

சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலரான மேதா பட்கர் 1954ம் ஆண்டு பிறந்தார். இவர் குடிசை வாசிகள், ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் போன்ற சமூகங்களின் உரிமைக்காகவும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் பல இயக்கங்களில் ஈடுப்பட்டுள்ளார். குறிப்பாக நீர் பாதுகாப்பு மற்றும் சமமான நீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று பல வழிகளில் குரல் கொடுத்தார்.

ஜாதவ் பயேங்:

ஜாதவ் பயேங்

`இந்தியாவின் வன மனிதன்` என்றழைக்கப்படும் ஜாதவ்  பயேங் 1959ம் ஆண்டு அஸாமில் பிறந்தார். இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் வனத்துறை பணியாளர் ஆவார். பிரம்மபுத்திரா நதியில் உள்ள உலகின் மிகப்பெரிய நதி தீவான மஜூலியில் குறிப்பிட்ட வனப் பகுதியில் தனியாக மரங்கள் நடவு செய்து பரமாரித்து வருவதில் இவர் மிகவும் பிரபலமானவர். தரிசு மணலை காடாக மாற்றுவதில் பெரிய முயற்சி செய்து வருகிறார். இவரின் இந்த உயரிய பணிக்காக பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

ராஜேந்திர சிங்:

ராஜேந்திர சிங்

இவர் சுற்றுசூழல் ஆர்வலர் மற்றும் நீர் பாதுகாப்பாளர் ஆவார். ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பு முறைகளை புதுப்பிக்கும் முயற்சியில் இவர் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டார். மழைநீர் சேகரிப்பு மூலம் 1000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கினார். அதேபோல் இவரின் இயக்கத்தின் மூலம் அர்வாரி, ரூபரேல், சர்சா உள்ளிட்ட ராஜஸ்தானின் ஐந்து ஆறுகளுக்கு புத்துயிர் வழங்கினார்.

சாலுமரதா திம்மக்கா:

சாலுமரதா திம்மக்கா

கர்நாடகாவில் 1910ம் ஆண்டு பிறந்த திம்மக்கா மரங்களை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் பல அசாதாரணமான பணிகளைச் செய்தார். திம்மக்கா தனது கணவருடன் சேர்ந்து 1950 களில் கர்நாடகாவில் உள்ள ஹூலிகலில் 4 கிமீ நெடுஞ்சாலையில் ஆலமரங்களை நடத்தொடங்கினார். பல சவால்களை சந்திக்க நேரிட்டும் தொடர்ந்து மரங்களை நட்டுக்கொண்டே இருந்தார்.

துளசி கவுடா:

துளசி கவுடா

கர்நாடகாவில் பிறந்த சுற்றுசூழல் ஆர்வலரான இவர் தன் வாழ்நாளில் இதுவரை 1 லட்சம் மரங்களை நடவு செய்துள்ளார். ஹலக்கி என்ற பழங்குடியைச் சேர்ந்த இவர், வறுமையில் இருந்த போதிலும் தரிசு நிலத்தை வனமாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கினார். இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT