Smartest crow
Smartest crow 
பசுமை / சுற்றுச்சூழல்

உலகின் மிகவும் புத்திசாலி காகம் எது தெரியுமா?

பாரதி

மனிதர்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு வேலைகளுக்கும் கருவிகளை பயன்படுத்துவார்கள் என்பது நாம் அறிந்ததே. அதேபோல் ஒரு காகம் தனது உணவை எடுப்பதிலிருந்து அனைத்திற்கும் கருவிகளையே பயன்படுத்தும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! இந்த காகம் அனைத்திற்கும் கருவிகளைதான் பயன்படுத்துமாம். அப்போது யார் அந்த கருவிகளைச் செய்து கொடுப்பார்கள் என்ற சந்தேகம் வருகிறதா? அதற்கு முதலில் அந்த காகத்தைப் பற்றி நாம் மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த வகையான காகங்கள் தெற்கு பசிபிக் தீவில் தான் பூர்விகமாக வாழ்ந்து வருகின்றன. இந்தக் காகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்துத் தப்பிப்பதற்கு, உணவு கண்டுப்பிடிப்பதற்கு என அனைத்திற்குமே அதற்கான கருவிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து சில தகவல்களைக் கூறினார்கள். ஒருமுறை காடுகளில் கண்டறியப்பட்ட இந்த இனத்தின் காகம் ஒன்று, இரையை எடுக்கும் காட்சியை நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள். ஆம்! அந்தக் காகம் ஒரு சிறிய மரத்தின் பொந்தில் புழு இருப்பதைப் பார்த்திருக்கிறது. அதனை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக வெகுநேரம் மூக்கினால் எடுக்க முயற்சி செய்து வந்தது. ஆனால் புழு சிக்காமல் தப்பித்துக்கொண்டே இருந்தது. இதனால் பொருமை இழந்த காகம் பறந்து சென்று ஒரு மெலிதான குச்சியை எடுத்து வந்து புழுவை எடுக்க முயற்சித்தது. அதுவும் அந்தப் புழுவின் மூக்கில் சரியாக விட்டு எடுக்க முயற்சித்தது. அப்படி முயற்சிக்கையில் மற்றொரு சிக்கலும் வந்தது. ஆம்! குச்சி நீளமாக இருந்ததால் அதனை கையாளத் தடுமாறியது. பிறகு அதனை மடக்கி, புழுவின் மூக்குப் பகுதியில் விட்டு அழகாக வெளியில் எடுத்து அந்தப் புழுவை சாப்பிட்டது.

எப்படி இந்தப் புழுவை எடுப்பதற்கு ஒரு கருவியை வளைத்து நெளித்து பயன்படுத்தியதோ? அதேபோல்தான் மற்ற அனைத்திற்கும் தானே குச்சிகள் போன்ற இயற்கை பொருட்களால் அதுவே கருவிகளை செய்யும். இதனை பெற்றோர்களோ இல்லை மற்றவர்களோ யாருமே அதற்கு சொல்லித்தர மாட்டார்கள். அதுவே தன் சுய புத்தியினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே கருவிகளைச் செய்யும்.

இந்த அதிபுத்திசாலியான காகத்தின் பெயர் என்ன தெரியுமா? New Caledonian crows . மற்ற பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தப் பறவைக்குத்தான் உடலளவுடன் ஒப்பிடுகையில் பெரிய மூளை உள்ளது. அதேபோல் அதிக அளவு குரல் ஒலிகளைக் கொண்டதும் இந்தப் பறவைத்தான். காகங்களுக்குள் தொடர்புக்கொள்கையில் இவை பல விதமான குரல்களைப் பயன்படுத்துகின்றன.

ஆகையால் இந்த New Caledonian காகம்தான் மிகவும் புத்திசாலியான காகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் காகத்தைப் பற்றி படித்தால் பானையில் கூழாங்கற்களைப் போட்டு தண்ணீரை மேலே கொண்டு வந்த காகம்தான் நியாபகத்திற்கு வருகிறது.

ஒருவேளை இருக்குமோ?

"திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல" வெப்பன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேச்சு!

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

SCROLL FOR NEXT