வரலாறு:
ரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் ஹெவியா பிராசிலின்சிஸ். 1870 இல் ஹென்றி விக்ஹாம் என்பவர் மிகுந்த துன்பத்திற்கு இடையே பிரேசில் நாட்டில் இருந்த 70,000 ரப்பர் மரத்தின் விதைகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு போய் இங்கிலாந்தில் பயிரிட்டார். அங்கு சுமார் 2000 ரப்பர் கன்றுகள் முளைத்தன.
இதிலிருந்து தரமான விதைகள் 1876 ஆம் ஆண்டு சிலோனில் அமைந்துள்ள பொட்டனிக்கல் கார்டனுக்கு அனுப்பப்பட்டன. பின்னர் சிலோனில் இருந்து 1877ம் ஆண்டு 22 மர கன்றுகள் சிங்கப்பூருக்கும், பெரூவில் உள்ள கோலாகங்சார் மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டன. 1878 ல் 22 மரக்கன்றுகளில் 9 கன்றுகள் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு கோலாகங்சாரில் நடப்பட்டன. 1880 களில் கோலாகங்சாரில் பயிரிடப்பட்ட ரப்பர் மரங்கள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்கிய வேளையில் அவற்றின் விதைகள் 1883 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு அனுப்பட்டன. கோலாகங்சாரில் பயிரிடப்பட்ட 9 கன்றுகளில் ஒன்றே ஒன்று மட்டும் தான் எப்படியோ தப்பி பிழைத்தது. அந்த ஒரே கன்றுதான் பெரிய மரமாகி அதன் விதைகளின் மூலமாக மற்ற மரக்கன்றுகளும் உயிர் பெற்று பல்லாயிரம் மரங்கள் பிறந்தன. அப்படி உருவாகிய ரப்பர் மரங்களை கொண்டு தான் 1887 ல் மலேசியாவில் முதல் ரப்பர் தோட்டம் நிறுவப்பட்டது.
தன்மை:
இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிரீமி, மஞ்சள் மற்றும் இதழ்கள் இல்லாமல் கடுமையான பூக்களை உருவாக்குகிறது. இது உயரமான கிளைகள் மற்றும் பெரிய பட்டை கொண்ட மென்மையான மரம்.
வெள்ளை அல்லது மஞ்சள் நிற சாறு மரப்பட்டையில் உள்ளே இருக்கும். 'லேடக்ஸ்' எனப்படும் மரத்தின் பால் சாறு பிரித்தெடுக்கப்பட்டு சிறிய கொள்கலன்களில் சேகரிக்க படுகிறது. இந்த பால் இயற்கை ரப்பர் தயாரிக்க பயன்படுகிறது.
ரப்பர் மரத்தின் பழம் மூன்று பெரிய விதைகள் கொண்ட ஒரு காப்ஸ்யூல் ஆகும். பழுத்த உடன் அது வெடித்து திறக்கும்.
இயற்கையான மரத்தில் முதல் அறுவடைக்கு 7 முதல் 10 ஆண்டுகள் ஆகும். வயதுக்கு ஏற்ப பால் உற்பத்தி குறைக்கிறது.
ஒவ்வொரு மரத்திற்கும் 6 முதல் 8 மணிநேரம் சூரிய ஒளி தேவைப்படுகிறது.
வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தேவைப்படுகிறது. அறை ஈரப்பதம் உட்பட பல்வேறு ஈரப்பத நிலைகளை தாங்கும்.
அமிலம், எரிமலை, கரி மண்ணில் செடி நன்றாக வளரும். தண்ணீர் தேங்குவதையும், வறட்சி நிலையையும் தாங்கும் என்றாலும் நன்கு வடிகால் வசதியுள்ள மண் அவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது
ரப்பரின் பயன்பாடுகள்
ரப்பர் பொருட்கள் மேட், மற்றும் தரையமைப்பு பயன்பாடுகளிலும், பந்துகள், நீர்புகா ஆடைகள், பலூன்கள், மெத்தைகள் தயாரிப்பிலும் மற்றும் பென்சிலால் ஆன எழுத்துக்களை அழிப்பதற்கும் பயன்படுகிறது.
சில வகையான ரப்பர்கள் வழங்கும் நெகிழ்வுத்தன்மை, அச்சு இயந்திரங்கள் மற்றும் வீட்டு ஆடைகளுக்கான ரிங்கர்களில் பயன்படுத்த முடிகிறது.
சுத்திகரிக்க படாத ரப்பர், பசைகள் மற்றும் சிமெண்டில் பயன்படுகிறது. இது கட்டுமான தொழிலுக்கு முக்கியமாக அமைகிறது.
மருத்துவ கையுறைகள் உட்பட மருத்துவ நிபுணர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதிலும், சிறிய அளவிலான தோட்ட கலை பயன்பாடுகளுக்கு தோட்ட குழல்களிலும், குழாய்களிலும், இன்சுலேடிங் பாதணிகள், போர்வைகள் பெரும்பாலும் கிரீப் ரப்பரை பயன்படுத்தி தயாரிக்கபடுகின்றன.
முதல் ரப்பர் தோட்டத்தை நினைவு படுத்தும் வகையில் நூற்றாண்டுகள் கடந்து கோலாகங்சரில், பால் கிண்ணம் உறைந்த ரப்பர் பாலை சீட்டாக கொண்டு வரும் இரண்டு இயந்திரங்களுடன், ரப்பர் விதைகள் சிதறி கிடக்க கம்பீரத்துடன் நிற்கிறது அந்த தாய் மரம்.