Sarcastic Fringehead Fish.
Sarcastic Fringehead Fish. 
பசுமை / சுற்றுச்சூழல்

Sarcastic Fringehead Fish: பார்க்கத்தான் முரடன், ஆனால் சரியான காமெடி பீஸ்!

கிரி கணபதி

கடலில் வாழும் விசித்திரமான உயிரினங்களில் ஒரு குறிப்பிட்ட இனம் அதன் தனித்துவமான நடத்தை மற்றும் அசாதாரண தோற்றத்திற்காக தனித்து நிற்கிறது. அதுதான் The Sarcastic Fringehead எனப்படும் ஒரு வகை மீன் இனம். இந்த சுறுசுறுப்பான மீன் தன் உருவத்தை மறைத்துக் கொள்வதில் மாஸ்டர். இந்த பதிவில் இந்த குறிப்பிட்ட மீனின் ரகசியங்களை கொஞ்சம் ஆராய்வோம். 

வித்தியாசமான கிண்டலடிக்கும் தோற்றம்: இந்த மீனை முதலில் பார்ப்பதற்கு ஒரு ஆறு அங்குல நீளம் கொண்ட சிறிய மீன் போலதான் இருக்கும். இதுவே இந்த மீனுக்கு ஒரு அச்சுறுத்தல் எனில் மிகவும் வித்தியாசமான தோற்றம் கொண்ட அவதாரத்தை எடுக்கும். அதாவது பார்ப்பதற்கு இந்த உயிரினம் அவ்வளவு பயங்கரமானதாக தெரியாது. ஆனால் இதற்கு ஒரு பாதிப்பு வரும்போது அதன் வாயை அகலமாகத் திறந்து உதடுகளை வெளியே நீட்டி, ஒரு சைக்கோ போல நடந்து கொள்ளும். இதன் வித்தியாசமான செய்கையால் இதை சாப்பிட வரும் எதிரி உயிரினம் பின்வாங்க ஆரம்பிக்கும்.

கிண்டலுக்கு பெயர்போன உயிரினம்: பெரும்பாலான மீன் இனங்கள் அதன் தனித்துவமான ஒலிகள் மூலமாக தொடர்பு கொள்ளும், ஆனால் இந்த Sarcastic Fringehead இனமானது, தன் வாயை அகலமாகத் திறந்து ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு தனித்துவமான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இவை பார்ப்பதற்கு இரண்டு மீன்கள் ஒன்றாக உணர்ச்சிவசப்பட்டு முத்தமிடுவது போல் தோன்றும். இப்படி இவை தன் வாயைத் திறந்து காட்டிக்கொள்ளும்போது ஒன்றோடொன்று கிண்டலடித்து பேசிக் கொள்வது போலவே இருக்கும். 

Sarcastic Fringehead.

மறைத்துக் கொள்வதில் ஜித்தன்: இவற்றின் வித்தியாசமான நடத்தைகள் கிண்டல் அடிக்கும் விதமாக இருந்தாலும்,  Sarcastic Fringehead மீன்கள் தன்னை மறைத்துக் கொள்ளும் சிறந்த மாறுவேட நிபுணர்கள். இவை பெரும்பாலும் கடலுக்கு அடியில் கைவிடப்பட்ட பொருட்களில் வசிக்கின்றன. இதன் மூலமாக தன்னை வைத்துக்கொண்டு கொண்டு இரையை பதுங்கியிருந்து தாக்கி வீழ்த்துகிறது. குறிப்பாக இவற்றின் உடல்கள் மச்ச வடிவங்கள் மற்றும் விளிம்புகளின் இணைப்புகளால் மூடப்பட்டிருக்கும் என்பதால், அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மறைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. எனவே இவற்றின் இரை இந்த மீனை கண்டறிந்து தப்பிப்பது சாத்தியமற்றதாகிறது. 

விஞ்ஞானிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் வசீகரிக்கும் தன்மை கொண்ட இந்த Sarcastic Fringehead என்ற ஆழ்கடல் உயிரினம், அதன் துடிப்பான நடத்தை மட்டும் தோற்றத்தின் மூலமாக தனித்துவமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவை சார்ந்த காணொளிகளை இணையத்தில் தேடிப் பார்த்தால், அவற்றின் நடவடிக்கை நிச்சயம் உங்களுக்கு புன்னகையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். 

அச்சத்தை வெல்ல உதவும் 7 அழகான குறிப்புகள்!

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

SCROLL FOR NEXT