Spain Water Shortage.
Spain Water Shortage. 
பசுமை / சுற்றுச்சூழல்

தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் பார்சிலோனா!

க.இப்ராகிம்

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் பார்சிலோனா, காடலோனியா பகுதிகள்.

ஐரோப்பா கண்டத்தின் 5வது பெரிய நகரம். ஸ்பெயினின் 2வது பெரிய நகரம் என்று அழைக்கப்படும் பார்சிலோனா, காடலோனியா பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. நடப்பு ஆண்டு ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வெயிலின் காரணமாக ஒட்டுமொத்த நகரும் தண்ணீருக்காக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மேலும் 60 லட்சம் மக்கள் வாழக்கூடிய பகுதிக்க தண்ணீர் வழங்கும் ஏரிகளில் 18 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏரிகளின் தண்ணீர் இருப்பை சேர்த்தாலும் 43% தண்ணீர் இருப்பு மட்டுமே உள்ளது. வரக்கூடிய காலத்தில் மழையின்மை தொடருமே ஆனால் இவை மிக விரைவில் காலியாகும் சூழ்நிலை உள்ளது.

மேலும் பார்சிலோனா, காடலோனியா பகுதி மக்கள் தண்ணீரை வாங்க மிகப்பெரிய அளவில் தொகைகளை செலவு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இவ்வாறு தங்கள் வருமானத்தில் 50% தொகையை தண்ணீருக்காக செலவு செய்து வருகின்றனர். வரக்கூடிய காலத்தில் இது மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் தற்போது இருக்கக்கூடிய தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையற்ற வகையில் தண்ணீரை செலவு செய்பவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் குடிதண்ணீரை தேவையற்றவற்றிற்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வேளாண் பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் பார்சிலோனா, காடலோனியா பகுதி மக்களினுடைய நீர் தேவையை பூர்த்தி செய்ய ஐரோப்பாவின் செயல்பட்டு வரும் மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை பெரிய அளவில் அப்பகுதி மக்கள் நம்பி இருக்கின்றனர். அருகாமை நாடுகளில் இருந்து தண்ணீரை இறக்குமதி செய்யவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசமான வரட்சி கால்நடைகளின் உயிரிழப்புக்கும் காரணமாக மாறி இருக்கிறது.

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

SCROLL FOR NEXT