The cataclysm that Earth faced 65 million years ago. 
பசுமை / சுற்றுச்சூழல்

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எதிர்கொண்ட பேரழிவு!

கிரி கணபதி

மது பூமி கிரகத்தில் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அசாதாரணமான ஒன்று நிகழ்ந்தது. அதை நாம் புதைப் படிவங்களில் காணலாம். தொடக்க நிலை பாறை அடுக்குகளில் ஏராளமாக இருக்கும் புதைப்படிமங்கள் அதற்கு பிந்தைய பாறை அடுக்குகளில் இல்லை. இதை வைத்துப் பார்க்கும்போது, கடல் உயிரினங்களும், பெரிய அளவிலான டைனோசர்களும், தாவரங்களும் திடீரென அழிந்திருக்கிறதென்பது தெரிய வருகிறது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் உருவான பல இனங்கள் அழிந்துவிட்டதாகக் நம்பப்படுகிறது. இதுவரை பூமியில் வாழ்ந்த எல்லா வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் 99 சதவீதம் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். எனவே, 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேரழிவில் வெறும் டைனோசர்கள் மட்டுமின்றி, வேறு பல உயிரினங்களும், தாவரங்களும் அழிந்துவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

பூமியின் தோற்றம்: 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேம்பிரியன் வெடிப்பின் மூலமாக பூமியில் ஆரம்பகால வாழ்க்கை உருவாகத் தொடங்கியது. அதன் பிறகு நடந்த பரிணாம வளர்ச்சியால் பூமியில் பல உயிர்கள் உருவாகத் தொடங்கின. ஆனால், அவ்வப்போது பூமியில் பேரழிவுகள் ஏற்பட்டதால் பூமியில் உருவான உயிரினங்களில் குறைந்தது 99 சதவீதமாவது குறுகிய காலத்தில் அழிந்துவிட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதுவரை பூமியில் ஐந்து பேரழிவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு முறை இந்த அழிவு ஏற்படும்போதும் பூமியிலிருந்து பல உயிரினங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

டைனோசர்களின் அழிவு: இறுதியாக இந்த பூமி, 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரழிவை சந்தித்துள்ளது. அப்போதுதான் டைனோசர் இனம் பூமியிலிருந்து அழிக்கப்பட்டது. இதை விஞ்ஞானிகள் KT பேரழிவு என அழைக்கின்றனர். இந்த நிகழ்வு பூமியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 'கிரெடேசியஸ்' எனப்படும் புவியியல் காலத்தின் முடிவையும், இதற்கு அடுத்த மூன்றாம் காலகட்டத்தின் தொடக்கத்தையும் இது குறிக்கிறது. 

இதுவரை பூமியில் ஐந்து பேரழிவுகள் நடந்துள்ளதால், ஆறாவது மிகப்பெரிய பேரழிவும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஆனால், அது எப்போது, எந்த வடிவில், எத்தனை ஆண்டுகள் கழித்து நடைபெறும் என கணிக்க முடியாது. ஒருவேளை ஆறாவது பேரழிவு என்று ஒன்று நடந்தால், அதற்கு மனிதர்கள்தான் காரணமாக இருப்பார்கள் என பல வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாம் சிறுகச் சிறுக நம்முடைய தேவைக்காக இயற்கை வளங்களை அழிப்பதே ஆறாவது பேரழிவுக்குக் காரணமாக அமையலாம்.

எனவே, இயற்கை வளங்களை அழித்து, மனித குலத்தை வாழ வைக்க முயற்சிப்பது, நமக்கே ஒரு காலகட்டத்தில் ஆபத்தாக முடியலாம்.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT