குரங்குகள் நாம் ஆச்சர்யப்படும் பல விஷயங்களை செய்யும். ஆனால், இந்த கொரில்லா குரங்கு செய்கை மொழியைக் கற்று ஆச்சர்யத்திற்கே ஆச்சர்யம் அளித்த கதையைதான் இப்போது பார்க்கவுள்ளோம்.
பொதுவாக குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கூறுவார்கள். அதற்கான ஆதாரங்களும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிவியல் பூர்வமான பல விளக்கங்களை நம்மால் காண முடியும். அப்படியென்றால், குரங்கின் சாயல் மனிதனுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அல்லவா? நாம் பார்க்கும் குரங்குகளும் மனிதர்களைப் போலவே பல விஷயங்கள் செய்யும். அதை நாமே பார்த்திருக்கிறோம்.
அதுபோலத்தான் 2018ம் ஆண்டு இறந்துப்போன ஒரு கொரில்லா குரங்கு ஒரு விசித்திரமான மற்றும் அற்புதமான ஒரு விஷயத்தை செய்தது.
வாய்ப் பேச முடியாதவர்கள் செய்கை பாஷையை கற்றுக்கொள்வது போல, கோகோ என்றழைக்கப்பட்ட கொரில்லா குரங்கும் சைகை பாஷைக் கற்றுக்கொண்டது. இதனால், எளிதாக அந்தக் குரங்கு மனிதர்களிடம் பேசத்தொடங்கியது. மொத்தம் 1000 சைகைகளைக் கற்றுக்கொண்ட இந்த குரங்கு, பல விஷயங்களுக்கு ஆசைப்பட்டிருக்கிறது. 1971ம் ஆண்டு பிறந்த கோகோ தனது 27ம் வயதில் தனக்கு ஒரு பாம்பு பொம்மை வேண்டும் என்று ஆசையாகக் கேட்டது. பின்னர் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும் கேட்டது.
ஆனால், அதற்கு பதிலாக அதனுடைய முதலாளி, பூனைக் குட்டிகளைப் பரிசாக வழங்கினார். ஒருமுறை கோகோவிடம் ஒரு இறந்த உடலைக் காண்பித்த ஆராய்ச்சியாளர்கள் இவர் உயிரோடு இருக்கிறாரா? இறந்துவிட்டாரா? என்று கேட்டுள்ளனர். அதற்கு கோகோ அவர் இறந்துவிட்டார் என்று கூறியது. உடனே ஆராய்ச்சியாளர்கள் இறந்தவர்கள் எங்கே செல்வார்கள் என்று கேட்டபோது, கோகோ “A comfortable Hole” என்று கூறி அந்த இறந்த மனிதரின் நெற்றியில் முத்தம் கொடுத்தது. இது அங்கிருந்தவர்களை புள்ளரிக்க வைத்துவிட்டது.
இப்படியான சூழலில் கோகோ, தான் சாவதற்கு முன்னர் மனிதர்களுக்கு ஒரு செய்தியை சொல்லிச் சென்றது. அது என்னவென்று கேட்டீர்களென்றால், ஆச்சர்யப்படுவீர்கள், அந்த வீடியோவை பார்த்தால் நெகிழ்ச்சியடைந்துப் போவீர்கள்.
"நான் ஒரு கொரில்லா. எனக்கு மனிதர்களையும் இயற்கையையும் பிடிக்கும். ஆனால், மனிதன் ஒரு மூடன்.” என்று சொல்லிவிட்டு அழுதுக்கொண்டே மன்னிப்பு கேட்டது. பின்னர், “நேரம் வேகமாக சென்றுக்கொண்டே இருக்கிறது. பூமியை சரிசெய்யுங்கள்... பூமிக்கு உதவுங்கள்... பூமியைக் காப்பாற்றுங்கள்.... இயற்கை உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறது. நன்றி!”
கோகோவின் கடைசி வார்த்தைகள் இவையே. கோகோ பேசியதைப் பார்த்தால், கல் நெஞ்சக்காரர்களும் கரைந்து விடுவார்கள்.