ABC Milk Shake
ABC Milk Shake 
உணவு / சமையல்

ABC Milk Shake: கோடை காலத்துக்கு ஏத்த அற்புத பானம்!

கிரி கணபதி

கோடை காலத்துக்கு உங்கள் சுவை மொட்டுக்களைத் தூண்டும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் சத்து மிகுந்த பானத்தைத் தேடுகிறீர்களா? அப்படியானால் ABC மில்க் ஷேக்தான் உங்களுக்கு சரியானது. அப்ரிகாட், பாதாம் மற்றும் முந்திரியின் க்ரீமியான கலவையில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள ஒரு உன்னதமான மில்க் ஷேக்தான் இது. சரி வாருங்கள் இந்த அற்புதமான ABC மில்க் ஷேக் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • 6-8 அப்ரிகாட் எனப்படும் உலர்ந்த பாதாமி பழங்கள்.

  • ¼ கப் பாதாம்.

  • ¼ கப் முந்திரி.

  • 2 கப் பால்.

  • 1 ஸ்பூன் தேன் அல்லது உங்களுக்கு விருப்பமான இனிப்பு.

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் முந்திரியை தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதேபோல உலர்ந்த பாதாமி பழங்களை வெதுவெதுப்பான நீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊற வைத்தால் அவை மென்மையாகி குண்டாகிவிடும். இவை அனைத்தும் மென்மையானால் மட்டுமே மில்க் ஷேக் க்ரீமி பாதத்தில் இருக்கும்.

அனைத்தும் நன்றாக ஊறியதும், தண்ணீரை வடிகட்டி ஒரு கப் பால் சேர்த்து பிளெண்டர் அல்லது மிக்ஸி பயன்படுத்தி மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கெட்டியாக மில்க் ஷேக் வேண்டுமென்றால் பால் குறைவாக சேருங்கள். நீர்த்த பதத்தை விரும்பினால் பால் அதிகமாக சேர்க்கலாம். 

அடுத்ததாக நீங்கள் அரைத்து வைத்துள்ள கலவையில் ஒரு ஸ்பூன் தேன் அல்லது உங்களுக்கு விருப்பமான இனிப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மில்க் ஷேக்கை மற்றொரு பாத்திரத்திற்கு  மாற்றி சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டவும். மில்க் ஷேக்கை குளிர்விப்பது அதன் சுகையை அதிகரித்து மேலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இருக்கும். 

நன்கு கூலிங் ஏறியதும் அதை மீண்டும் ஒரு முறை நன்றாகக் கலந்து பரிமாறும் கண்ணாடி கிளாசில் ஊற்றி அதன் மேலே கொஞ்சம் நறுக்கிய பாதாம், மற்றும் நட்ஸ் தூவி அலங்கரித்தால் முற்றிலும் வித்தியாசமான ABC மில்க் ஷேக் தயார். அப்புறம் என்ன? கோடை காலத்திற்கு இத முயற்சி செஞ்சு என்ஜாய் பண்ணுங்க. 

CSK Vs RR: தோனி பெல்ட் அணிந்ததற்கு இப்படி ஒரு காரணமா? வெளியான தகவல்!

இந்தியாவின் வளர்ச்சி மற்ற வளரும் நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு!

உலகின் ஒரே அஷ்டம சனி பரிகார கோயில் எங்குள்ளது தெரியுமா?

(நான்) பேசுவது சரியா?

மக்களைக் கவரும் நுங்கு மில்க் ஷேக்!

SCROLL FOR NEXT