ஆந்திரா உளுந்து லட்டு 
உணவு / சமையல்

ஆந்திரா உளுந்து லட்டு: சுவையான பாரம்பரிய இனிப்பு செய்முறை! 

கிரி கணபதி

இனிப்புகள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது தமிழ்நாட்டு இனிப்புகள்தான். அதேபோல இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான இனிப்பு வகைகள் உள்ளன. அந்த வகையில் ஆந்திராவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றுதான் ‘உளுந்து லட்டு’. இந்த லட்டு உளுந்து, வெல்லம், நெய் போன்ற எளிமையான பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான இனிப்பாகும். இதை எளிதாக வீட்டிலேயே செய்துவிடலாம். 

ஆந்திரா உளுந்து லட்டு பல நூற்றாண்டுகளாக தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகும். இது பொதுவாக திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் வீட்டு விருந்துகளில் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஆந்திராவில் இந்த லட்டு பலருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாக உள்ளது. சரி வாருங்கள், இந்தப் பதிவில் ஆந்திரா லட்டு எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • உளுந்து 1 கப்

  • வெல்லம் 1 ½ கப்

  • நெய் ½ கப்

  • ஏலக்காய் தூள் ½ ஸ்பூன் 

  • ஜாதிக்காய் தூள் ¼ ஸ்பூன் 

செய்முறை: 

  1. முதலில் உளுந்தை நன்கு சுத்தம் செய்து 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் ஊரிய உளுந்தை தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும். அடுத்ததாக வேகவைத்த உளுந்தை ஆற வைத்ததும் மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். 

  2. இப்போது ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் அரைத்த உளுந்து மாவு சேர்த்து நன்கு வதக்கவும். மாவு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். 

  3. வெல்லத்தை பொடிப்பொடியாக சீவி ஆரிய உளுந்து மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஏலக்காய் தூள் ஜாதிக்காய் தோல் சேர்த்து நன்கு கலக்கவும். 

  4. இறுதியாக இந்த கலவையை சிறுது சிறிதாக எடுத்து, கைகளால் உருண்டை பிடித்தால், ஆந்திரா ஸ்பெஷல் உளுந்து லட்டு தயார். இதை செய்வது மிகவும் எளிதானதாகும். வீட்டில் என்றாவது முயற்சித்துப் பார்த்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறி மகிழுங்கள். 

குறிப்புகள்: உளுந்தை வதக்கும்போது அதிகம் கருகிவிடாமல் கவனமாக இருக்கவும். வெல்லத்தின் அளவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தயாரித்த லட்டுக்களை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT