உணவு / சமையல்

அரிசி ரவா உப்புமா

கல்கி

சுந்தரி காந்தி, பூந்தமல்லி.
தேவை:
அரிசி ரவை – 200 கி
காரட் ,பீன்ஸ்,பட்டாணி, (சேர்த்து) – 1 /2 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 3
கருவேப்பிலை, மல்லி சிறிதளவு
கடுகு 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு 1 ஸ்பூன்
கடலைபருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

செய்முறை:
முதலில் அரிசியை மிக்சியில் உடைத்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வறுத்து கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு, சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி, தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய பீன்ஸ், காரட், பட்டாணி சேர்க்கவும், மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியதும் 4 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை மெதுவான சேர்த்து கட்டி விழாமல் கிளற வேண்டும். அரிசி ரவை ஒட்டாமல் நன்கு சுருண்டு வந்த்தும் இறக்கவும். இந்த அரிசி ரவா உப்புமா , ரவா உப்புமாவுக்கு நல்ல மாற்று.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT