தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ குடித்து போர் அடித்து விட்டவர்களுக்காகவே கண்டுப்பிடிக்கப்பட்டது தான் ‘சாக்லேட் பாம்’.
இது குழந்தைகளை மட்டுமில்லாமல் பெரியவர்களையும் இதன் புதுமையான சுவையால் கவர்ந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தினமும் பால் குடித்து குழந்தைகளுக்கு போர் அடிக்கிறது என்றால், வீட்டிலேயே இந்த சாக்லேட் பாமை செய்து கொடுத்து பாருங்களேன்!
சாக்லேட் பாம் செய்ய தேவையான பொருள்:
டார்க் சாக்லேட்- தேவையான அளவு.
மார்ஸ்மெல்லோ- தேவையான அளவு.
சாக்லேட் மில்க் பவுடர்.
ஸ்பிரிங்கல்ஸ்.
சாக்லேட் சிப்ஸ்.
கன்டென்ஸ்ட் மில்க்.
சாக்லேட் பாம் செய்முறை விளக்கம்:
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பிறகு டார்க் சாக்லேட்டை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இப்போது வெட்டிய சாக்லேட்டை ஒரு பவுலில் போட்டு, அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் வைத்து சாக்லேட்டை உருக்கவும்.
சாக்லேட் நன்றாக உருகியதும் அதை எடுத்து சாக்லேட் பாம் செய்வதற்காகவே மோல்ட் விற்கிறது. அதை வாங்கி பயன்படுத்தவும்.
இப்போது அந்த மோல்டில் சாக்லேட்டை நன்றாக பரப்பவும். பிறகு அதை அப்படியே எடுத்து பிரிட்ஜில் 10 முதல் 15 நிமிடம் நன்றாக செட்டாக விடவும்.
பிறகு அந்த மோல்டை எடுத்து சாக்லேட்டை பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அதில் ஒரு பக்கத்தில் சாக்லேட் மில்க் பவுடர், சிறிது மார்ஸ்மெல்லோ, ஸ்பிரிங்குல்ஸ், சாக்லேட் சிப்ஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து நிரப்பி வைத்து கொள்ளவும்.
பிறகு இன்னொரு பகுதியை எடுத்து ஃபேனை சற்று சூடு பண்ணி அதில் லேசாக ஓரத்தை உறுக வைத்து நிரப்பி வைத்த பகுதி மீது வைத்து ஒட்டவும்.
இப்போது சாக்லேட் பாம் பந்து தயாராகிவிட்டது. அதன் மீது கன்டென்ஸ்ட் மில்க் கொஞ்சம் அழகுக்கு ஊற்றி ஸ்பிரிங்கில்ஸை தூவி விடவும். இதை மறுபடியும் பிரிட்ஜில் 30 நிமிடம் வைத்து நன்றாக செட்டான பிறகு எடுக்கவும்.
சாக்லேட் பாமை எப்படி பறிமாறுவது தெரியுமா?
சூடான பாலை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு, அதில் செய்து வைத்திருக்கும் சாக்லேட் பாமை போட வேண்டும். சூடான பாலில் சாக்லேட் பாம் உருகி உள்ளிருக்கும் சாக்லேட் மில்க் பவுடரும், மார்ஸ்மெல்லோவும் பாலில் கலந்துவிடும். இப்போது அதை நன்றாக ஒரு முறை தேக்கரண்டியை வைத்து கலக்கி விட்டு பருகவும். சுவையான சாக்லேட் பாம் தயார்.
இதன் புதுமையான யோசனை பலரை கவர்ந்ததாலும் இப்படி செய்து பார்ப்பது குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கும் வேடிக்கையாக இருப்பதால், சாக்லேட் பாம் மிகவும் பிரபலமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.