உணவு / சமையல்

அரிசிப் பொரி உப்புமா

கல்கி

கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தேவை:
கர்நாடகா ஸ்பெஷல் அரிசி பொரி 2 கப்
வேர்க்கடலை 1/4 கப்
கடுகு ,சீரகம், கறிவேப்பிலை தாளிக்க
வெங்காயம் 2
பச்சை மிளகாய்3
ர்க்கரை ஒரு ஸ்பூன்
மஞ்சள்பொடி 1/2 ஸ்பூன்
வறுத்து பொடித்த பொட்டுக்கடலை மாவு 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு ஒரு மூடி
உப்பு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:
அரிசி பொரியை 2 கப் நீர் விட்டு அலசி பிழிந்து எடுத்து வைக்கவும். ஊறவிட வேண்டாம். வாணலியில் எண்ணெய் விட்டு வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொண்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது பிழிந்து வைத்துள்ள அரிசி பொரியை அதில் சேர்த்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சுவையைக் கூட்ட சிறிது சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கிளற சுவையான கர்நாடகா ஸ்பெஷல் அரிசிப் பொரி உப்புமா ரெடி.

கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!

மனித வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தும் இரண்டு விதமான சிந்தனை அமைப்புகள்!

தினம் ஒரு புதிர்: உங்கள் பார்வை கூர்மையாக உள்ளதா? முடிந்தால் மறைந்துள்ள எழுத்தை கண்டுபிடியுங்கள்!

தீப திரிகளின் வகைகளும்; பயன்களும்!

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

SCROLL FOR NEXT