உணவு / சமையல்

சுடச்சுட சுவையான அரிசி அவல் இட்லி செய்வது எப்படி!

பி.மஹதி

தேவை:

பச்சரிசி – 3 கப்,

அவல் – 1 கப்,

உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,

வெந்தயம் – 1 ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் – 1 கப்,

கெட்டித் தயிர் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

தாளிக்க – நெய் – 2 ஸ்பூன்.

கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருகாயப்பொடி – சிறிது,

பச்சைமிளகாய் -3,

இஞ்சி சிறிது.

செய்முறை:-

பச்சரிசியை களைந்து ஊறவைக்கவும். அவல், வெந்தயம், உளுத்தம் பருப்பையும் தனித்தனியே சிறிது நீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும், பச்சரிசி, தேங்காய்த் துருவலை அரைத்து, பிறகு வெந்தயம், உளுத்தம் பருப்பைச் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த மாவில், உப்பு, பெருங்காயப் பொடி, அவல், தயிர் கலந்து 12 மணி நேரம் மூடிவைக்கவும். பிறகு, நெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவில் கொட்டி, இட்லித் தட்டுகளில் போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுவது சுலபமே!

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டிய வெளி பாதுகாப்பு குறிப்புகள்!

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT