Bread Roll Recipe.  
உணவு / சமையல்

ஈசியாக செய்யலாம் இந்த சிம்பிள் பிரட் ரோல்! குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தா? 

கிரி கணபதி

உங்கள் குழந்தைகள் எதை செய்து கொடுத்தாலும் சாப்பிடுவதில்லையா? அப்படியானால் ஒருமுறை இந்த பிரட் ரோல் செய்து கொடுத்துப் பாருங்கள். ஒன்று கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். மாலை நேரத்தில் டீ, காபியுடன் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஒரு சிறந்த ஸ்நாக் இதுதான். சரி வாங்க இந்த பிரட் ரோல் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

பிரட் - 10

சீஸ் - 1 பாக்கெட்

முட்டை - 2

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் பிரட்டை ஒவ்வொன்றாக சப்பாத்தி கட்டை வைத்து சப்பாத்தி போல தேய்த்துக் கொள்ளுங்கள். 

அடுத்ததாக இரண்டு பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளுங்கள். 

பின்னர் முட்டையை ஒரு சிறிய கப்பில் ஊற்றி அதை நன்றாக பீட் செய்து கொள்ளவும். 

இப்போது தேய்த்து வைத்த பிரட் மேலே சீஸ் துண்டை வைத்து, அதை அழகாக சுருட்டிக் கொள்ள வேண்டும். 

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 

பின்னர் சுருட்டி வைத்துள்ள பிரடை, முட்டையில் தொய்த்து, பிரட் க்ரம்சில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால், சூடான சுவையான பிரட் ரோல் தயார். 

இதை செய்வது மிக மிக எளிது. நிச்சயம் ஒரு முறையாவது இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT