Healthy recipes 
உணவு / சமையல்

மழைக்கால நோய்களை விரட்டும் சென்னங்கி கீரை!

வி.ரத்தினா

சென்னங்கி மற்றும் காசிவிந்தா என அழைக்கப்படும் சென்னங்கி கீரை குளிர்கால நோய்களுக்கு மாமருந்தாக செயல்படுகிறது.  குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கும், காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் பசியின்மை வாய் கசப்பு, சுவையின்மை ஆகியவற்றுக்கும் இந்த கீரையின் இலைகளை பொடியாக செய்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும். இக்கீரை மழைக் காலத்தில் அநேகமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும். கீரை விற்பவர்களிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கீரை மழைக்காலங்களில் வரும் வியாதிகளுக்கு இயற்கை கொடுத்த கொடையாகும். இந்தக் கீரையின் தண்டு சிவப்பாகவும் சிறிய இலைகளும் மஞ்சள் நிற பூக்களையும் கொண்டது கிராமங்களில் இந்த கீரையை காபி சென்னா என்றும் அழைக்கின்றனர்.காபி கொட்டை கிடைக்காத சமயம் இந்த கீரையின் விதைகளை வறுத்து அரைத்து காபி தயாரித்து அருந்துவார்கள்.

இதன் ஒவ்வொரு பகுதியும் பல மருத்துவ  குணங்களைக் கொண்டுள்ளது  இந்தக் கீரை வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் வாதத்தையும் விஷத்தையும் முறிக்கும் சக்தி இதற்கு உண்டு காயங்கள் புண்கள் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்த சென்னங்கி கீரை பயனுள்ளதாக இருக்கும்
கோங்குரா போலவே சென்னங்கி கீரையை  பருப்புடன் சேர்த்தோ  பச்சடி பொடி தொக்கு என பல விதங்களில் செய்து சாப்பிடலாம் தெலங்கானாவின் பிரபலமான சென்னங்கி தொக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

 சென்னங்காக்கு தொக்கு  செய்முறை:

 தேவை:

சென்னங்கி கீரை (ஆய்ந்தது)      1கப்
சீரகம்                -1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை  -1 ஸ்பூன்
வர மிளகாய்         - 6
எள்                  -1 ஸ்பூன் 
கருவேப்பிலை        -சிறிது
பெருங்காயம்         -சிறிது
பூண்டு                2 பல்
புளி                  -சிறிது


தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தலா ஒரு ஸ்பூன், வரமிளகாய் ஒன்று, கருவேப்பிலை  சிறிது எண்ணெயில் சென்னங்கி கீரையை நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு வாணலியில் மேலும் சிறிது எண்ணெய்விட்டு மேலே கூறிய அனைத்து பொருட்களையும் நன்கு வறுத்து ஆற விடவும். பின் வதக்கிய கீரை வறுத்த பொருட்களுடன்  புளி, உப்பு சேர்த்து நீர் விட்டு அரைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து எடுத்தால் சுவையான சென்னங்கி தொக்கு நாக்கை சுண்டியிழுக்கும் மழைக் காலங்களில் கிடைக்கும் இந்தக் கீரையை உணவுகளில் சேர்த்து சாப்பிட மழைக்கால நோய்கள் வராமல் தடுக்கலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT