ரங்கூன் புட்டு...
ரங்கூன் புட்டு... Image credit - youtube.com
உணவு / சமையல்

செட்டிநாடு ஸ்பெஷல் ‘ரங்கூன் புட்டு’ ருசியா செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

‘ரங்கூன் புட்டு’ பாரம்பரியமான செட்டிநாட்டு ரெசிபியாகும். செட்டியார்களால் வியாபாரத்திற்காக ரங்கூன் சென்ற போது அங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. புட்டு எப்போதும் அரிசியை வைத்தே செய்யப்படும் உணவாகும். இதில் அரிசிக்கு பதில் ரவை சேர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்புமிக்க வித்தியாசமான ரங்கூன் புட்டை வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

ரவை-200 கிராம்.

நெய்-10 தேக்கரண்டி.

வெல்லம்-250கிராம்.

துருவிய தேங்காய்-1 கப்.

தேங்காய் பால்-100கிராம்.

ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி.

முந்திரி- 10.

உப்பு- 1 சிட்டிகை.

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 5 தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் 10 முந்திரியை போட்டு பொன்னிறமாகவும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே நெய்யில் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 250கிராம் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து கிண்டவும். பின்பு வெல்லத்தை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் 1 தேக்கரண்டி நெய் விட்டு அத்துடன்  200 கிராம் ரவையை சேர்த்து வறுத்தெடுக்கவும். ரவை நன்றாக பொன்னிறமாக ஆனதும் அத்துடன் செய்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிண்டவும். பிறகு தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிண்டவும். உப்பு ஒரு சிட்டிகை சேர்த்துக்கொள்ளவும் இப்போது ரவை நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் 1கப், முந்திரி 10, ஏலக்காய் ½ தேக்கரண்டி கடைசியாக நெய் 1 தேக்கரண்டி சேர்த்து கிண்டி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான ரங்கூன் புட்டு தயார். வீட்டிலேயே ஒருமுறை செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

விலை மதிப்பற்ற முட்டை ஓடும், பயன்படுத்திய காபி தூளும்!

அற்புத சத்துமிக்க பாலக்கீரை கட்லெட் செய்யலாம் வாங்க!

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

உங்க குழந்தை பிளே ஸ்கூலுக்கு போகத் தயாரா? அப்படியென்றால் இதையெல்லாம் கவனத்துல வைச்சுக்குங்க!

SCROLL FOR NEXT