Crunchy Iranian Samosa! 
உணவு / சமையல்

மொறு மொறு ஈரான் சமோசா! 

கிரி கணபதி

ங்களுக்கு இந்தியன் சமோசா சாப்பிட்டு போர் அடித்திருந்தால், ஒருமுறை இந்த ஈரான் சமோசாவை வீட்டில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். பேசாமல் நாமும் ஈரானுக்கு சென்று விடலாமா என நினைக்கத் தோன்றும். 

தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு - 1/4 கிலோ

  • மைதா மாவு பேஸ்ட் - சிறிதளவு மைதா மாவை தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

  •  உப்பு - தேவையான அளவு.

  •  எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

சமோசா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

  • வெங்காயம் - 2 நறுக்கியது

  • எண்ணெய் - சிறிதளவு

  • அவல் - 50 கிராம் அரைத்தது

  • மல்லித்தழை - பொடியாக நறுக்கியது சிறிதளவு.

  • மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

ரு பாத்திரத்தில் மைதா மாவு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீர் கலந்து அதை மிருதுவாக சமோசா செய்வதற்கு ஏற்ற வகையில் பிசைந்துகொள்ள வேண்டும். மாவை நன்றாக பிசைந்தால் சமோசா நன்றாக வரும். பிசைந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். 

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் போட்டு மிதமான தீயில் வதக்கவும். அடுத்ததாக மிளகாய் தூள் சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி, அடுப்பை அணைத்துவிட்டு, சூடாக இருக்கும் போதே கொத்தமல்லித்தழை மற்றும் அவல் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 

பின்னர் ஊற வைத்துள்ள சமோசா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லியதாக வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். அதை சரிபாதியாக வெட்டிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சமோசாவின் முக்கோண வடிவம் கிடைக்கும். பின்னர் அதன் மீது கொஞ்சம் மாவைத் தூவி, தவாவில் சூடாக்கினால் ரொட்டி தயாராகிவிடும். அனைத்து மாவையும் இதே போல அரைவட்டமாக வெட்டி ரொட்டி போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் பூரணத்தை சமோசாவில் ஸ்டப் செய்து முக்கோணமாக மடித்து, மைதா பேஸ்ட் உதவியுடன் ஒட்ட வேண்டும். இது பூரணம் வெளிவராமல் பார்த்துக் கொள்ளும். பின்னர் தயார் செய்த சமோசாவை சூடான எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்தால் சுவையான ஈரான் சமோசா தயார். இதன் சுவை இந்திய சமோசாக்களை விட முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT