கார்ன் மிக்சர் 
உணவு / சமையல்

நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

கல்கி டெஸ்க்

கார்ன் மிக்சர்

தேவை: கார்ன்ஃப்ளேக்ஸ் - 100 கிராம், கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், முந்திரி - 100 கிராம், திராட்சை - 50 கிராம், அவல், பொட்டுக் கடலை தலா 50 கிராம், சர்க்கரை - 1 டீஸ்பூன், உப்பு, மிளகாய்த் தூள் தேவைக்கு, எண்ணெய் - 50 மில்லி.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி பிழியவும், கார்ன்ஃப்ளேக்ஸ். அவல், முந்திரி, பொட்டுக்கடலை, திராட்சையைத் தனித்தனியாக வறுத்து ஓமப்பொடியில் சேர்த்து. சர்க்கரை, உப்பு, காரம் கலக்கவும்.

- சி.மகாலக்ஷ்மி, திருச்சி

 

கரபுரா

தேவை: மைதா மாவு - 1 கப், கோதுமை மாவு - ¼ கப், உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய், பெருங்காயம் - தேவைக்கு.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு, சப்பாத்தியாக இட்ட மாவை, கட் செய்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- வசந்தா வைத்தியலிங்கம், கோயமுத்தூர்

கொய்யா இலைத் தட்டை

தட்டை...

தேவை: பச்சரிசி - ½ கிலோ, பாசிப் பருப்பு - 50 கிராம், வெண்ணெய் - 100 கிராம், தேங்காய் - 1, உடைத்த வேர்க்கடலை - 2 கப், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: களைந்து, உலர்த்தி, மிஷினில் அரைத்த ஈர அரிசி மாவை வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்த பாசிப் பருப்பை மாவாக்கவும். தேங்காய்ப் பால் எடுத்து நீர் விடாமல் எல்லாவற்றையும் ஒன்றாக்கி பிசையவும். எண்ணெய் தடவிய கொய்யா இலையில் மாவை தட்டையாகப் பரத்தி, சிறிது காய்ந்தவுடன், எடுத்துப் பொரித்தெடுக்கவும். (மாவை மட்டும்; இலையுடன் அல்ல).

- சுகந்தா ராம், சென்னை

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT