மாங்காய் தொக்கு:
1. மாங்காய் - 1 கப் துருவியது
2.நல்லெண்ணெய் - 1/2 கப்
3.கடுகு - 1 ஸ்பூன்
4.பெருங்காய தூள் - 2 சிட்டிகை
5.மஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்
6.வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
7.உப்பு - தேவையான அளவு
8.வற்றல்தூள் - 1 ஸ்பூன்
செய்முறை
1.அரை ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் போட்டு, சிவக்கும் வரை வறுத்து ஆறியபின் பொடி செய்து கொள்ளவும்.
2.பத்து வர மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, சூடு ஆறியவுடன், நன்கு அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3.மாங்காயை தோல் சீவி துருவியில் துருவிக் கொள்ளவும்.
3.வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயம் போட்டு, சிவந்த்தும் கடுகு போடவும். கடுகு வெடித்த பின் துருவிய மாங்காயை போட்டு கிளறவும்.
4.ஒரு நிமிடம் மூடி வைத்து விட்டு, பிறகு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு மூன்றையும் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் மூடி வைத்து விடவும். மூன்று நிமிடம் கழித்து, மூடியை திறந்து, நன்கு கிளற வேண்டும்.
5. மாங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும். அவ்வாறு எண்ணெய் பிரியும் வரை கிளற வேண்டும். பின், பொடித்த வெந்தயத்தை தூவி, நன்கு கிளறி, இறக்க வேண்டும்.
இஞ்சி,பூண்டு தொக்கு:
தேவையான பொருட்கள்
1.இஞ்சி -50கிராம்.
2.பூண்டு - 100 கிராம்
3.கல் உப்பு – தேவையான அளவு.
4.வெல்லம் – சிறிதளவு.
5.புளி – எலுமிச்சை அளவு. கதகதப்பான நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
6.வற்றல்தூள்– 1ஸ்பூன்.
7.மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்.
8.கடுகு - 1 ஸ்பூன்
9.நல்லெண்ணய்- தேவையான அளவு
வறுத்த பொடிக்க :
வெந்தயம், கடுகு, சீரகம் – தலா 1/2 ஸ்பூன்
செய்முறை:
1.வெந்தயம், கடுகு, சீரகம் ஆகிய மூன்றையும் தனித்தனியே எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
2.இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவிக் கொள்ளவும்.பூண்டு உரித்து கொள்ளவும்
3.இஞ்சி,பூண்டை வாணலியில் எண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி ஆற வைக்கவும்.
4.பின்இஞ்சி, பூண்டு, வெல்லம் ஆகியவற்றுடன் புளிச்சாறு கலந்து மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
5.வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தபிறகு, மிக்சியில் அரைத்து வைத்த இஞ்சி ,பூண்டு விழுதினைச் சேர்க்கவும்.
6.மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும். நடுநடுவே கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
7.சிறுதீயில் வைத்து நன்கு கிளறவும்.
8.எண்ணெய் பிரிந்து வந்ததும் வெந்தயம், கடுகு, சீரகப் பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.
சூடான சாத்த்தில் நல்லெண்ணையுடன் இந்த தொக்கு சேர்த்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
தயிர்சாதம், பழைய சாதத்திற்கும் நல்ல பொருத்தமாக இருக்கும்.