உணவு / சமையல்

சுவையான சுண்டல் வகைகள்!

செளமியா சுப்ரமணியன்
Kalki vinayagar

மொச்சை கொட்டை சுண்டல்


தேவையான பொருட்கள்: 

மொச்சை கொட்டை - 100 கிராம்

பச்சை மிளகாய் -5 

இஞ்சி - 1 துண்டு

உப்பு தேவைக்கேற்ப

இட்லி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

கடுகு 2 ஸ்பூன் 

எண்ணெய் - தாளிக்க

நெய் - 2 ஸ்பூன்

கடலைமாவு - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது 


செய்முறை:

மொச்சைக் கொட்டையை கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும். மறுநாள் காலை நன்கு சுத்தமாக களைந்து எடுத்து வைத்து , தண்ணீருடன் உப்பு சேர்த்து, நன்றாக வேகவிட்டு வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு , கடுகு மஞ்சள் தூள், பச்சை மிளகாய் ,  இஞ்சி இட்லி மிளகாய் பொடி, மொச்சையை போட்டு கடலைமாவை கரைத்து ஊற்றி  நன்றாக கலக்கவும். நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.

வெள்ளை பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்:


வெள்ளை பட்டாணி -1 கப்

எண்ணெய் -1ஸ்பூன்

பச்சை மிளகாய் - 6 

இஞ்சி - ஒரு துண்டு

 இட்லி மிளகாய் தூள்-1  ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 

கடுகு -1 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

கருவேப்பிலை 

பெருங்காயம்


செய்முறை:

ச்சை பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை அதை களைந்து உப்பு போட்டு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இட்லி மிளகாய் பொடி போட்டு நன்றாக வதக்கிக் வெந்த பட்டாணியை அதில் போட்டு நெய்விட்டு நன்றாகக் கிளறி கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

காராமணி சுண்டல்

தேவையான பொருட்கள்:

காராமணி -1 கப்

எண்ணெய் -1ஸ்பூன்

பச்சை மிளகாய் - 6 

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 

கடுகு -1 ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

இட்லி மிளகாய் தூள்-1  ஸ்பூன் 

நெய் - 1 ஸ்பூன்

கருவேப்பிலை 

பெருங்காயம்


செய்முறை:

வெறும் வாணலியில் காராமணியை  வறுத்து, பிறகு உப்பு போட்டு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இட்லி மிளகாய் பொடி போட்டு நன்றாக வதக்கிக் வெந்த காராமணியைஅதில் போட்டு நெய்விட்டு நன்றாகக் கிளறி கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT