Dibba Rotti Recipe. 
உணவு / சமையல்

ஆந்திரா ஸ்பெஷல் Dibba ரொட்டி.. ஒன்னு சாப்பிட்டா போதும்!  

கிரி கணபதி

பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் அதன் தனித்துவமான சுவைக்கு பெயர் போனவை. அதில் ஆந்திராவைச் சேர்ந்த திப்பா ரொட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆந்திராவில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இந்த உணவு அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மற்றும் பல மசாலாப் பொருட்களின் கலவையால் செய்யப்படும் அப்பமாகும். இந்த பதிவில் ஆந்திராவில் மட்டுமே கிடைக்கும் திப்பா ரொட்டி எப்படி செய்வது? எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • 2 கப் அரிசி மாவு

  • ¼ கப் உளுத்தம் பருப்பு

  • 2 வெங்காயம் 

  • 2 பச்சை மிளகாய் 

  • 1 ஸ்பூன் துருவிய இஞ்சி 

  • 1 ஸ்பூன் சீரகம் 

  • 1 ஸ்பூன் மிளகுத்தூள் 

  • கருவேப்பிலை சிறிதளவு

  • கொத்தமல்லித்தழை சிறிதளவு

  • உப்பு தேவையான அளவு

  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீர் அனைத்தையும் வடிகட்டி மிக்ஸி அல்லது பிளெண்டர் பயன்படுத்தி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

அடுத்ததாக ஒரு பெரிய கிண்ணத்தில் அரிசி மாவு, அரைத்த பருப்பு விழுது சேர்த்து சுமார் 8 மணி நேரம் அப்படியே புளிக்க விடுங்கள். மாவு நன்றாகப்ர புளித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, சீரகம், மிளகு கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். 

மாவு அதிக கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளுங்கள். ஆனால் ஓரளவுக்கு மாவு கெட்டியாகதான் இருக்க வேண்டும். அடுத்ததாக நான் ஸ்டிக் பேன் அல்லது ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து கொஞ்சமாக எண்ணெய் சேர்க்கவும்.

பின்னர் அதில் ஒரு டம்ளர் மாவை ஊற்றி, எல்லா புறமும் கேக் போல பரப்பி விடவும். ரொட்டியின் விளிம்புகளிலும் அதன் மேற்பரப்பிலும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை சில நிமிடங்கள் வேக விடுங்கள். 

இப்போது ரொட்டியை திருப்பி போட்டு சில நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால், மிகவும் மிருதுவான திப்பா ரொட்டி தயார். இந்த ரொட்டியை ஒன்று சாப்பிட்டாலே உங்களுக்கு வயிறு நிறைந்துவிடும். இந்த அற்புதமான ரெசிபியை ஒருமுறையாவது வீட்டில் முயற்சித்து பார்த்து, உங்களது பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT