World's most expensive fruits Image Credits: Lerneo
உணவு / சமையல்

உலகிலேயே விலை அதிகமுள்ள பழங்கள் என்னென்ன தெரியுமா?

நான்சி மலர்

லகில் இயற்கையாகவே படைக்கப்பட்ட பழங்கள் வெறும் சுவை மிகுந்தது மட்டுமில்லாமல், அதிக சத்துக்களையும் கொண்டிருக்கிறது. அதில் சில பழங்கள் அதிக விளைச்சலின் காரணமாக எளிதாக கிடைக்கும். இன்னும் சில பழங்கள் அதன் அரிதான தன்மைக்காகவும், நேர்த்திக்காகவும் அதிக விலையில் விற்கப்படுகிறது. அப்படிப்பட்ட விலை அதிகமான பழங்களைப்பற்றித் தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

1.யுபாரி கிங் மெலன் (Yubari king melon)

இந்த பழம் ஜப்பானில் மட்டுமே பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான் ஹோக்கய்டோ தீவிலுள்ள யுபாரி நகரத்தில் இந்த பழத்தை  வளர்க்கிறார்கள். இதுவே உலகிலேயே அதிக விலையுள்ள பழமாகும். யுபாரி கிங் மெலன்  ஒரு ஜோடியின் விலை 30,000 டாலர்களுக்கு விற்க்கப்பட்டிருக்கிறது. இந்த பழத்தை ஜப்பானில் நடைப்பெறும் சூகன் பண்டிகைக்கு பரிசாக கொடுப்பார்கள். இந்த பழத்தின் ஆரஞ்சி நிறத்தில் உள்ள பழக்கூழும், அதிகமான இனிப்பு சுவையும், இந்த பழத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் விவசாய முறைகளும் தான் இது அதிக விலை விற்க காரணம் என்று கூறுகிறார்கள்.

2.டென்சுக்கே வாட்டர் மெலன் (Densuke watermelon)

டென்சுக்கே தர்பூசணி உலகிலேயே இரண்டாவது விலை அதிகமான பழங்கள் பட்டியலில் உள்ளது. இந்த தர்பூசணி பழம் 6000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் கண்ணாடி போன்ற கருப்பு நிறத்திற்காகவும், சிகப்பு நிற பழத்திற்காகவும், விதைகள் இல்லாத இனிப்பான சுவைக்காகவும் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த பழத்தின் பற்றாக்குறையும் ஒரு காரணம். டென்சுக்கே தர்பூசணி ஹோக்கய்டோ தீவிலே வளர்க்கப்படுகிறது.

ரூபி ரோமன்ஸ் கிரேப் (Ruby romans grapes)

ரூபி ரோமன்ஸ் கிரேப் ஜப்பானில் உள்ள Ishikawa prefecture என்னும் இடத்திலே விளைகிறது. இதனுடைய எடையையும், இனிப்புத்தன்மையையும் வைத்தே இதில் சிறந்ததை தேர்வு செய்கிறார்கள். சிகப்பாக, உருண்டையாக, சாதாரண திராட்சையை விட அளவில் பெரிதாக இருக்கும். இந்த திராட்சை 26 பழங்களை கொண்ட ஒரு கொத்து 8,400 டாலருக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்காய் இச்சி ஆப்பிள் (Sekai ichi apple)

இந்த ஆப்பிள் ஒரு மரத்தில் குறைந்த அளவிலேயே காய்க்குமாம். இதன் அளவும் பெரிதாக இருக்கும். இந்த வகை ஆப்பிள் மிகவும் இனிப்பு சுவையை கொண்டது. இந்த ஆப்பிளே உலகிலேயே விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு ஆப்பிள் 20 டாலருக்கு விற்கப்படுகிறது. ‘சிக்காய் இச்சி’ என்பதன் அர்த்தம், உலகிலேயே முதலாவது என்பதாகும்.

மியாசக்கி மாம்பழம் (Miyazaki mangoes)

மியாசக்கி மாம்பழத்தை ‘தயோ நோ டமேகோ’ என்றும் அழைப்பார்கள். இதன் அர்த்தம் சூரியனை போல வடிவமுள்ள முட்டை என்று பொருள். இந்த பழத்தை ஜப்பானியர்கள் அடிக்கடி சாப்பிடுவதில்லை ஒருவருக்கு பரிசாக கொடுப்பதற்கே வாங்குவார்கள். மியாசகி மாம்பழம் ஒன்று 50 டாலருக்கு விற்கப்படுகிறது. சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்த மாம்பழம் அதிக இனிப்பும், சுவையும் கொண்டுள்ளது. இந்தியாவிலும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் இந்த மாம்பழம் பயிர் செய்யப்படுகிறது.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT