What are the ingredients in 500 rupees idli? Image Credits: The Hindu
உணவு / சமையல்

500 ரூபாய் இட்லி உண்மையிலேயே இளமையை கொடுக்குமா?

நான்சி மலர்

மீபத்தில் சமூக வலைத்தளம் மற்றும் Food bloggers ஆல் பிரபலமாக பேசப்பட்ட 500 ரூபாய் இட்லியை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். 'அப்படி என்ன அந்த இட்லியில் இருக்கிறது?' என்று யோசிப்பதற்கு முன்பு, ‘என்ன ஒரு இட்லி 500 ரூபாயா?’ என்று பலரை அதிர்ச்சியடைய செய்தது இந்த ஒரு இட்லியின் விலை. இருப்பினும் அதன் விலைக்கான காரணம், இந்த இட்லியை சாப்பிடுவதால் வயதாவதை தடுத்து இளமையை திருப்புவதாக சொல்லப்பட்டது. உண்மையிலேயே இந்த இட்லியை  சாப்பிடுவது மூலம் வயதை குறைக்க முடியுமா? தெளிவாக தெரிஞ்சிக்கலாம் வாங்க.

முதலில் இந்த இட்லியில் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கலாம். இட்லி, ஆலிவ் ஆயில், ப்ளூ பெர்ரி, அஸ்வகந்தா, Flax seeds, shiitake Mushroom, Butter curry, தோலுரித்த பாதாம், குங்குமப்பூ, கொத்தமல்லி போன்ற பொருட்களால் செய்யப்பட்டுள்ளது.

இதை சாப்பிடுவதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும், நிறைய விட்டமின், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இதில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆலிவ் ஆயில் இதயத்திற்கு நல்லது, ப்ளூ பெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள்.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இட்லியை எதற்கு கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டும். வீட்டிலேயே 500 ரூபாய் இட்லி செய்யலாம் வாங்க. முதலில் ஒரு பவுலில் 1 இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிப் போட்டுக்கொள்ளவும். அதில்  ஆலிவ் ஆயில் சிறிது ஊற்றி ப்ளூ பெர்ரி ஒரு கைப்பிடி அளவு சேர்த்துவிட்டு அத்துடன் ஊறவைத்து தோலுரித்த பாதாம் 10, அதன் மீது பட்டர் கிரேவியை ஊற்றி அஸ்வகந்தா சிறிதளவு சேர்த்து கடைசியில் கொத்தமல்லியை தூவினால் சுவையான 500 ரூபாய் இட்லி தயார். எனவே, இதை வீட்டில் நீங்களே சுலபமாக செய்துவிடலாம். இந்த இட்லியை கண்டிப்பாக வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசையிருந்தால், நீங்களே வீட்டில் ஆரோக்கியமாக செய்து சாப்பிடுவது சிறந்தது.

ஒரு இட்லியை 500 ரூபாய்க்கு வாங்கி 30 நாட்கள் சாப்பிட வேண்டும் என்று கூறுவது சற்றே நெருடலாக தோன்றியது. அப்படி வாங்கி சாப்பிட்டால் கூட ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாய் வரும். இவ்வளவு பெரிய தொகையை ஒரே உணவுக்கு செலவு செய்வதற்கு பதில் Balanced diet ஆக காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், நெய், பால், கீரை வகைகள், சிக்கன், மட்டன் என்று வாங்கி சாப்பிடுவது அதைக்காட்டிலுமே சிறந்ததாகும். நார்ச்சத்து, புரதம், விட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடென்ட், கொழுப்புச்சத்து என்று அனைத்துமே கிடைத்துவிடும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். முயற்சித்துப் பாருங்களேன்.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT