Dosai recipe Image credit - youtube.com
உணவு / சமையல்

தோசைமாவு இல்லாமலே தோசை…! அதற்கு தோதாக பச்ச புளி சட்னியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தோசை மாவு இல்லை என்றாலும் மிகவும் சுவையான 100% தோசையை செய்யலாம். அதே சுவை, அதே மணத்துடன் இருக்கும், அவசரத்திற்கு கை கொடுக்கும் இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

சுவையான தோசை:

சாதம் ஒரு கப் 

தேங்காய் துருவல் 1/2 கப் 

அரிசி மாவு ஒரு கப் 

புளிச்ச தயிர் ஒரு கரண்டி 

உப்பு தேவையானது 

சர்க்கரை 1/2 ஸ்பூன் 

மெல்லிய அவல் 1/4 கப் 

தண்ணீர் தேவையான அளவு

 முதலில் மெல்லிய அவலை தண்ணீரில் இரு முறை களைந்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சாதம், தேங்காய் துருவல், புளிச்ச தயிர் சேர்த்து மிக்ஸியில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அரிசி மாவு, உப்பு தேவையான அளவு, சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

ஐந்து நிமிடத்தில் தோசை மாவு தயார். பட்டு பட்டாக சுட சுட தோசை செய்து பச்ச புளி சட்னியுடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.

டேஸ்டி பச்ச புளி சட்னி:

ருசியான இந்த சட்னியை இரண்டே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.

சின்ன வெங்காயம் 20 

பூண்டு 4 

சீரகம் 1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 3

புளி பெரிய கொட்டை பாக்கு அளவு பச்சை மிளகாய் 1

உப்பு தேவையானது

வெல்லம் சிறு துண்டு

இந்த சட்னிக்கு வறுக்க வேண்டாம், வதக்க வேண்டாம் பச்சையாகவே அரைக்க வேண்டியது தான். மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும். 

ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, பச்சை மிளகாய், புளி,வெல்லம் ஆகியவற்றை போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயப்பொடி, கருவேப்பிலை தாளித்து சட்டினியில் கொட்ட பச்சைப்புளி சட்னி தயார். செய்வதும் எளிது ருசியும் கூடுதலாக இருக்கும்.

எல்லாவிதமான டிபன் ஐட்டங்களுக்கும் தோதாக இருக்கும்.

சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

கரடி பொம்மைகளைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதால் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள்!

நம் உடலுக்குள் இருக்கும் கடிகாரம் பற்றி தெரியுமா? 

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆரஞ்சு விதைகள்!

சருமச் சுருக்கங்களைப் போக்க சில எளிய ஆரோக்கிய வழிகள்!

SCROLL FOR NEXT