Fig Halva Recipe 
உணவு / சமையல்

அத்திப்பழ அல்வா செய்முறை: செம டேஸ்டா இருக்கும்! 

கிரி கணபதி

அத்திப்பழம் நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் ஒரு அற்புதமான பழம். இதில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடியதுதான் சுவையான அத்திப்பழ அல்வா. இதுவரை இப்படி ஒரு ரெசிபியை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்தப் பதிவில் அத்திப்பழ அல்வா செய்வதற்கான எளிய செய்முறையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • அத்திப்பழம் - 250 கிராம் (கருப்பு அத்திப்பழம் சிறந்தது)

  • நெய் - 100 கிராம்

  • சர்க்கரை - 150 கிராம் (தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்)

  • ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

  • பாதாம், முந்திரி - சிறிது (அலங்கரிக்க)

செய்முறை: 

அத்திப்பழ அல்வா செய்வதற்கு முதலில் புதிதாக வாங்கிய அத்தி பழங்களை நன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் ஊறவைத்த அத்தி பழங்களை தண்ணீர் இல்லாமல் சேர்த்து வதக்கவும். 

அத்திப்பழம் நன்றாக மென்மையாகும் வரை வதக்கிய பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். சர்க்கரை கரைந்து அல்வா பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா நன்றாக திரண்டு வந்ததும் ஏலக்காய் சேர்த்து கிளறி அத்திப்பழ அல்வாவை வேறு தட்டுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். 

இறுதியில், அல்வாவின் மேல் பாதாம், முந்திரி போன்றவற்றை தூவி அலங்கரித்தால், சூப்பரான சுவையில் ஆரோக்கியமான அத்திப்பழ அல்வா தயார். சூடு ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். 

குறிப்புகள்: அத்தி பழங்களை நீண்ட நேரம் ஊற வைத்தால் அல்வா விரைவில் வெந்துவிடும். சர்க்கரை சேர்க்கும்போது அல்வா தண்ணீர் போல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். அல்வா பதம் வரும்வரை பொறுமையாக கிளறிக் கொண்டே இருக்கவும். அடி பிடிக்காமல் இருக்க தீயை மிதமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக நெய் சேர்த்தால் அல்வாவின் சுவை சூப்பராக இருக்கும். அல்வாவில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஜாதிக்காய் தூள், பட்டை தூள் போன்ற மசாலாக்களையும் சேர்க்கலாம். 

தயாரித்த அத்திப்பழ அல்வாவை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சேமித்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த அல்வா ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரை பேரில் இந்த அல்வாவை சாப்பிடுவது நல்லது. இதை குறைந்த நேரத்தில் எளிதாக செய்துவிட முடியும் என்பதால், இன்றே இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT