தேன்மிட்டாய்... 
உணவு / சமையல்

90ஸ் கிட்டின் தித்திக்கும் தேன்மிட்டாய் நினைவுகள்… வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

நான்சி மலர்

நீங்கள் 90ஸ் கிட்டாக இருந்தால், தேன்மிட்டாய்க்கு உங்கள் அறிமுகம் தேவைப்படாது. பெட்டிக் கடைகளில் கண்ணாடி குடுவையில் கண்ணை பறிக்கும் வண்ணத்தில் இருக்கும் தேன்மிட்டாய்களை வாங்குவதற்காகவே அடிக்கடி கடைக்கு போவோம். அதில் இருக்கும் தேனை சுவைப்பது ஒரு தனி அலாதியாக இருக்கும். இப்போது பெட்டிக்கடையும் இல்லை, தேன்மிட்டாயை கடைகளில் காண்பதும் அரிதாகிவிட்டது. எனவே வீட்டிலேயே தேன் மிட்டாய் எப்படி செய்வது என்று இன்று பார்க்கலாம்.

தேன்மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி-1கப்.

வெள்ளை உளுந்து-1/4 கப்.

ஜீனி-1 ½ கப்.

எழுமிச்சைப்பழ சாறு-5 சொட்டுகள்.

ஆரஞ்ச் நிற புட் கலர்- சிறிதளவு.

பேக்கிங் சோடா-1/4 தேக்கரண்டி.

எண்ணை-தேவையான அளவு.

தேன்மிட்டாய் செய்முறை விளக்கம்:

முதலில் அரிசி 1கப் மற்றும் வெள்ளை உளுந்து 1/4கப்பை ஒரு பாத்திரத்தில் நன்றாக அலசிய பிறகு 4மணி நேரம் ஊர வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் சக்கரை சேர்த்து ஜீனி சேர்த்து அது கரைவதற்கு ¾ கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். ஜீனி கரைந்து நன்றாக கொதித்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து 7 நிமிடம் கழித்து இறக்கவும். இப்போது செய்து வைத்திருக்கும் பாகில் 5 சொட்டு எழுமிச்சைப்பழ சாறை விடவும்.

பிறகு அரிசியையும் உளுந்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்போது மாவில் சிறிது ஆரஞ்ச் நிற புட் கலரை சேர்க்கவும். அத்துடன் ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடாவையும் சேர்த்துக்கொள்ளவும். இப்போது மாவை நன்றாக கலந்து விடவும். எண்ணையை மிதமான சூட்டில் வைத்து, கொஞ்சமாக மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக எண்ணையில் போடவும். எண்ணையில் நன்றாக பொரிந்ததும் எடுத்து செய்து வைத்திருக்கும் பாகில் போட்டு 15 நிமிடம் நன்றாக ஊற விடவும். பாகில் நன்றாக ஊறியதும் வெளியில் எடுத்து விடலாம். சக்கரை பாகு நன்றாக காய்ந்ததும் தேன்மிட்டாயை டாப்பாவில் போட்டு மூடி வைத்துவிடுங்கள். அவ்வளவு தான் தேன் மிட்டாய் தயார்.

இப்போ செய்து வைத்திருக்கும் தேன்மிட்டாயை எடுத்து சாப்பிட்டு பாருங்க 90ஸ் கிட்களுக்கு மலரும் நினைவுகள் தானாகவே வரும்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT