காலிஃப்ளவர் மல்லிகே
காலிஃப்ளவர் மல்லிகே youtube.com
உணவு / சமையல்

‘கம கம’ காலிஃப்ளவர் மல்லிகே சட்டுன்னு செஞ்சுடலாம்… ரசித்து ருசிக்கலாம்!

நான்சி மலர்

காலிஃப்ளவர் மல்லிகே மங்களூரில் மிகவும் பிரபலமான ஸ்டார்டர் ஆகும். இதை 15 நிமிடத்திற்குள் சுலபமாக செய்து முடிச்சிடலாம் நேரமே எடுக்காது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்போ காலிபிளவர் மல்லிகே எப்படி வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

காலிஃப்ளவர் மல்லிகே செய்ய தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் -1 கப்.

பச்சை மிளகாய்- 2

கொத்தமல்லி- ½ கட்டு.

பூண்டு-4

எழுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி.

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி.

கடலை மாவு- 2 தேக்கரண்டி.

அரிசி மாவு- 2 தேக்கரண்டி.

சோளமாவு- 2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பிறகு காலிபிளவரை குட்டி குட்டியாக வெட்டி எடுத்து அந்த நீரில் போட்டு  2 நிமிடம் விட்டு  இறக்கி வைத்து வடிகட்டி விடவும்.

இப்போது  ½ கட்டு கொத்தமல்லி, பூண்டு 4, பச்சை மிளகாய் 4 ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.

காலிஃப்ளவரில் சோளமாவு 2 தேக்கரண்டி, அரிசி மாவு 2 தேக்கரண்டி, கடலை மாவு 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு, எழுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, அத்துடன் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய்யை நன்றாக காய வைத்து அதில் காலிஃப்ளவர் கலவையை போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான,  கிரிஸ்பியான காலிஃப்ளவர் மல்லிகே தயார். வீட்டிலேயே செஞ்சி கொடுத்து எல்லோரையும் அசத்துங்க.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT