குஜராத்தின் புகழ்பெற்ற பலகாரமான இந்த ஃபஃப்டாவை நீங்கள் மாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையாகவும் க்ரன்ச்சியாகவும் மாலைப் பொழுதை கழிக்கலாம். அதேபோல் சிற்றுண்டிற்கும் மதிய உணவிற்கும் அதற்கேற்ற சைட் டிஷுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
1. 2 கப் கடலை மாவு
2. ¼ தேக்கரண்டி மஞ்சள்
3. ¼ தேக்கரண்டி ஓமம்
4. ¼ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
5. உப்பு
6. ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடா
7. தண்ணீர்
8. எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள், ஓமம், பேக்கிங் பவுடர், எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
அந்த பாத்திரத்தில் லேசாக வெந்நீரை சேர்த்து நன்றாக பிசையவும். பின்னர் அதனை ஒரு முழு உருண்டையாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்
கலந்த மாவை ஒரு 5 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்கவும். அப்போதுதான் மாவு மென்மையாக மாறும்அந்த மாவில் எண்ணெய் தடவி ஒரு ஈரத் துணியில் மூடி ஒரு அரை மணி நேரம் மீண்டும் அப்படியே வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து, அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள்
உருண்டைகள் அனைத்தையும் சப்பாத்தி கல்லில் வைத்து நேராகத் தேய்க்கவும். ரவுண்டாக தேய்க்க கூடாது. மேலும் கீழும் இழுத்து தேய்க்க வேண்டும்.
இப்போது பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். செய்து வைத்த சில பீஸ்களை மட்டும் எடுத்து மிதமான சூட்டில் ஆழமாக வறுக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானவற்றை எடுத்து வறுக்க வேண்டாம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற அளவு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
நன்கு பொன் நிறமாக வரும் வரை வறுத்து எடுத்தால் சுவையான குஜராத் Fafda தயார்.
இதனைப் பலகாரமாக மட்டுமல்ல, பச்சை சட்னியுடன் சிற்றுண்டியாகவும், பருப்புடன் சேர்த்து மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.