Healthy cucumber Recipes!
Healthy cucumber Recipes!  https://www.express.co.uk
உணவு / சமையல்

தூக்கு வெள்ளரி தூத்பேடா!

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – ½  கிலோ, (பிஞ்சுமில்லாமல் முற்றியதுமில்லாம நடுத்தரமானதாய்), சர்க்கரை - 200 கிராம், நெய் அல்லது டால்டா - 100 கிராம், மைதா 100 கிராம், கெட்டிப்பால் – ½ லிட்டர்,  காய வைத்த வெள்ளரி விதை - 1 டேபிள்ஸ்பூன். பச்சை கலர், வெனிலா எசென்ஸ் – சில துளிகள்.

செய்முறை:

வெள்ளரிக் காய்களைக் கழுவித் தோல்சீவி, விதைகளை அப்புறப்படுத்தி, துண்டங்களாக நறுக்கி, மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெள்ளரி விதையை லேசாக நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். மைதாவை லேசாக வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். பாலை வாணலியில் கொதிக்கவிட்டு வெள்ளரி விழுதைப்போட்டு நன்றாகக் கிளறவும்.

பால் வற்றி விழுது வெந்தவுடன் பாதி நெய்யை விட்டு கிளறவும். சர்க்கரையைச் சேர்த்து நிதானத் தீயில் நன்றாகக் கிளறவும். சர்க்கரை நன்கு சேர்ந்து 'தளதள' என்று கொதிக்கும்பொழுது மைதாவைப் போட்டுக் கட்டி தட்டாமல் கிளறி பாக்கி நெய்யை விடவும். கலர், எசென்ஸ் சேர்க்கவும். நன்றாகச் சேர்த்துப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

கைபொறுக்கும் சூடாக இருக்கும்பொழுது சின்ன உருண்டைகள் செய்து பேடா மாதிரி தட்டி வெள்ளரி விதைகளை அலங்கரிக்கவும்.

- சுந்தரி தியாகராஜன், திருச்சி.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT