healthy recipes Image credit - youtube.com
உணவு / சமையல்

ஆரோக்கிய நெல்லிக்காய் ஜாமூன், மற்றும் திகட்டாத அல்வா ரெசிபிஸ்!

கலைமதி சிவகுரு

சுவையான நெல்லிக்காய்    ஜாமூன், லாங் சேமியா தேங்காய் அல்வா மற்றும் கறுப்பு உலர் திராட்சை அல்வா செய்யலாம் வாங்க.

நெல்லிக்காய் ஜாமூன்

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் _1கப்

வெல்லப் பொடி_1/2 கப்

உப்பு _1ஸ்பூன்

மிளகாய்த் தூள் _2 ஸ்பூன்

கடுகு _1 ஸ்பூன்

எண்ணெய் _1ஸ்பூன்

பெருங்காயத்தூள் _1ஸ்பூன்

செய்முறை;

நெல்லிக்காயை நன்கு கழுவி துடைத்து எண்ணெயில் கடுகு, பெருங்காயம் வதக்கி நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பின் வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி விடலாம். மிகவும் சத்தான “நெல்லிக்காய் ஜாமூன்” ரெடி.

லாங் சேமியா தேங்காய் அல்வா

தேவை

நீளமான வெர்மி செல்லி சேமியா _1/2 கப்

நெய்  _1/2 கப்

வெல்லத் தூள் _1/2 கப்

கஸ்டர்டு பவுடர் _1ஸ்பூன்

துருவிய தேங்காய்_1/2 கப்

நறுக்கிய முந்திரி, பாதம் தலா _1 ஸ்பூன்

ஏலத்தூள் _ 1/2 ஸ்பூன்

வறுத்த வெள்ளை எள் _1/2 ஸ்பூன்

உப்பு _1சிட்டிகை

சூடான தண்ணீர் _1கப்

செய்முறை

ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் பாதாம், முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.

நீளமான சேமியாவை உடைத்து அதே கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு வறுத்து அத்துடன் ஒரு கப் சூடான தண்ணீரை விட்டு 5 நிமிடம் வேக விடவும். வெந்ததும் கஸ்டர்டு பவுடர் சேர்த்து அடுப்பை நிறுத்தி விட்டு சேமியாவை தனி பாத்திரத்தில் எடுக்கவும்.

பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் தேங்காய் துருவலை கருகாமல் பொன்னிறமாக வறுத்ததும்  1/2 கப் வெல்லத் தூள் போட்டு கரைந்ததும் வறுத்த பாதாம், முந்திரியை போடவும். பிறகு அதில் வெந்த சேமியா, வறுத்த எள்ளை போட்டு 1 ஸ்பூன் நெய் விட்டு சுருள கிளறி தீயை அணைத்து விடவும். பிறகு மேலே மீதமுள்ள நெய்யை விட்டு இறக்கவும்.

இப்போது எளிதான, சுவையான “லாங் சேமியா தேங்காய் அல்வா” தயார்.

கறுப்பு உலர் திராட்சை அல்வா

தேவையான பொருட்கள்

கொட்டை இல்லாத கறுப்பு உலர் திராட்சை_250 கிராம்

வெல்லம் _250 கிராம்

கார்ன் ஃப்ளோர் பவுடர் _4 ஸ்பூன்

நெய் _10 ஸ்பூன்

செய்முறை;

கறுப்பு திராட்சையை தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்கவும். பின்பு அதை கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த உலர் திராட்சையை சேர்த்து 10 நிமிடம் நன்கு வேக வைக்க வும். அடிபிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும். பின்பு வெல்லம் மற்றும் கார்ன்ஃப்ளோரை தண்ணீரில் கரைத்து அல்வாயில் சேர்த்து நன்கு கலக்கி கெட்டியாகும் வரை வேகவிடவும்.

பாதாமை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை அல்வாயில் நன்கு கலக்கி பரிமாறவும். மிகவும் சத்தான, சுவையான, எளிதான “கறுப்பு உலர் திராட்சை அல்வா” ரெடி.

இரவில் அரிசி சாதத்தை தவிர்க்கச் சொல்வது ஏன் தெரியுமா?

ChatGPTயைத் தாண்டிய உலகம்: அடுத்த தலைமுறை AI கருவிகள்! அவசியம் தெரிஞ்சுக்கணும் மக்களே!

இதை தெரிஞ்சுக்கிட்டாலே போதும் முகத்தில் உள்ள கொழுப்பு காணாமல் போகும்! 

சுதந்திரப் போராட்ட வீராங்கனை உதாதேவியின் தைரியமும் தியாகமும் பற்றி தெரியுமா?

எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டது சுவாமி ஐயப்பனின் சரண கோஷம்!

SCROLL FOR NEXT