sweets - kaaram recipes Image credit - youtube.com
உணவு / சமையல்

இதோ ஈஸியான தீபாவளி பட்சண டிப்ஸ் உங்களுக்காக..!

எஸ்.ராஜம்

* லட்டு பிடிக்கும்போது பாதாம் பவுடர் சிறிது சேர்த்தால், லட்டு பிடிப்பதும் எளிதாக இருக்கும். சுவை, மணம், சத்து கூடும்.

• ரவா லட்டு பிடிக்கும்போது, ரவையை வறுத்து மிக்ஸியில் அரைக்கும்போது கூடவே சர்க்கரையையும் சேர்த்து அரைத்தால் ரவா லட்டு பிடிக்க ஈஸியாக வரும்.

• லட்டு செய்வதற்கான கடலைமாவு கரைசல் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் வால் இல்லாமல் முத்து முத்தாக பூந்தி எண்ணெயில் விழும்.

• லட்டு செய்யும்போது பாதாம் எசன்ஸ் விட்டுக் கலந்து பிடித்தால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

• லட்டு செய்யும்போது பூந்தியை அரித்து உடனே பாகில் போடாமல் எல்லா பூந்தியும் செய்தபின் பாகு வைத்து அதில் கொட்டிக் கிளறி சிறிது அழுத்தி வைத்த பின் லட்டு பிடித்தால் நன்றாக வரும்.

• மைசூர்பாகு செய்யும்போது சிறிது பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து கடலை மாவுடன் சேர்த்து கிளறினால் மைசூர் பாகு நன்றாக வரும்.

• மைசூர் பாகு வெறும் நெய்யில் மட்டுமே செய்தால் மைசூர்பாகு கொஞ்சம் கறுப்பாக வரும். இதற்கு நெய்யுடன் சிறிதளவு ரீஃபைண்ட் ஆயிலையும் சேர்த்தால்தான் மைசூர் பாகில் ஆங்காங்கே ஓட்டை விழும்.

• மைசூர் பாகின் கலர் ஒரே சீராக வரவேண்டுமென்றால் 80 கிராம் கடலை மாவுக்கு 20 கிராம் மைதா சேர்க்கவேண்டும்.

• பாதுஷாவுக்கு மாவு பிசையும்போது மாவில் ஒரு சிட்டிகை ஆப்பசோடா, சூடு செய்த டால்டா இரண்டையும் கலந்து பிசையவும்.

• ஒரு கிலோ மைதாவுக்கு 350 கிராம் டால்டா சேர்த்தால் தான் பாதுஷா மெத்தென்று வரும்.

• சோமாஸ் மாவை கொஞ்சம் கூடுதலாக நெய் அல்லது டால்டா விட்டு பிசைந்தால் சோமாஸ் கிரிஸ்ப்பியாக வரும். மாவை சலித்துவிட்டு நன்கு அழுத்திப் பிசைந்தால் சோமாஸ் எண்ணெயில் வேகும்போது விரிசல் விடாது.

• குலோப் ஜாமூனை மெல்லிய தீயில்தான் பொரிக்க வேண்டும். இல்லையெனில் மேலே தீய்ந்து உள்ளே வேகாத மாவு இருக்கும்.

• கல்கண்டு வடை செய்ய மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து செய்தால் எண்ணெய் குடிக்காது. தண்ணீர் அதிகமாகி எண்ணெய் குடித்தால் சிறிது பச்சரிசி மாவு சேர்த்து பிசைந்து தட்டவும்.

• அதிரசமாவு செய்யும்போது அரிசியை மிஷினில் அரைத்து வந்ததும் உடனே பாகு வைத்து விடவும். சில சமயத்தில் நன்றாக வராமல் உதிரியாக வரும். அப்போது அதிரசமாவில் சிறிது வேகவைத்த பாசிப்பருப்பு, தேங்காய்ப்பூ போட்டு கரைத்து பணியாரமாக ஊற்றி எடுக்கவும்.

தீபாவளி கார டிப்ஸ்

கமகம பக்கோடா

கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, அரிசியை 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து ஒன்றரை டீஸ்பூன் மிளகு சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துச் செய்தால் மிளகு வாசனையுடன் ரிப்பன் பக்கோடா நன்றாக இருக்கும்.

மொறு மொறு பூந்தி

• கடலைப்பருப்பு, அரிசியை 4:1என்ற அளவில் மிஷினில் மாவாக அரைத்து செய்தால் பூந்தி மொறுமொறுப்பாக இருக்கும்.

முறுக்கு

• முள்ளு தேன்குழல், உளுந்து தேன்குழல் செய்யும்போது அரிசி அல்லது உளுந்தை வறுத்து மிஷினில் அரைத்து செய்தால் பட்சணம் வாசனையாக, கரகரப்பாக வரும்.

• முறுக்கில் போடப்போகும் எள்ளை வறுத்துப் போட்டால் முறுக்கு வாசனையாக இருக்கும்.

• முறுக்கு, சீடை, தேன்குழல் செய்யும்போது அரிசி+ உளுத்தமாவு

* கடலை மாவை சிறிது நெய்விட்டு வறுத்து விட்டு பிறகு மைசூர் பாக் செய்தால் கட்டி பிடிக்காது. மணம் கூடும்‌ வேலையும் எளிதாக முடியும். நெய் செலவும் குறையும்.

* தேங்காய் பர்பி செய்யும்போது, கெட்டியான தேங்காய் பால் சேர்த்தால், பர்பி மிருதுவாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.

* பாயசம் நீர்த்துப் போய்விட்டால், பொட்டுக்கடலை மாவை சிறிது கலந்து கிளறினால், பதம் சரியாகி, சுவையும் கூடும்.  

* கேசரி, பர்பி, பால்கோவா எது செய்தாலும் நான் ஸ்டிக் தவா பயன்படுத்தினால், அடி பிடிக்காது. கிளறுவது எளிது. நெய் செலவும் குறையும்.

*:பாகு மீது ந்து விட்டால் அதில் இஞ்சி நறுக்கி நெய்யில் வதக்கி போட்டு சாப்பிடலாம். தீபாவளி பலகாரங்கள் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். பாகும் வீணாகாது.

* பொட்டுக்கடலையை பொடித்து வைத்துக்கொண்டால் இனிப்பு, கார வகை பட்சணங்களுக்கு பயன்படுத்தலாம். நெய் செலவும் குறையும். வாய்வு, மந்தப் பிரச்னைகளும் வராது .

* தீபாவளி அன்று மதிய உணவு மோர் குழம்பு மிளகு சீரக ரசம், இஞ்சி துவையல் என்று எளிமையாக இருந்தால் அஜீரணம் மந்தம் பித்தம் எனும் பிரச்னைகள் வராது.

அதிகமாக டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!

மூட்டு வலி மற்றும் வீக்கத்துக்கு முடிவு கட்ட முன்னெடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!

நிலவின் வெப்பநிலை சரிந்தது எப்படி தெரியுமா?

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

SCROLL FOR NEXT