Variety snacks... 
உணவு / சமையல்

வீட்டிலேயே செய்யலாம் குழந்தைகளுக்குப் பிடித்த சில ஈஸி நொறுக்ஸ்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வெளியில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது தனி சுகம்தான். ஆரோக்கியமான இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேங்காய் பிஸ்கட்:

தேங்காய் 1

மைதா 1 1/2கப் 

சர்க்கரை 1/2 கப் 

நெய் 1/2 கப் 

பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன் 

உப்பு 2 சிமிட்டு 

பால் 2 கரண்டி

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு எவர்சில்வர் ரிங் வைத்து மூடி போட்டு  நன்கு  சூடாகும் வரை இருக்கட்டும். தேங்காய் ஒன்றை உடைத்து துருவிக் கொள்ளவும். சிறிதளவு தேங்காயை பொடிப் பொடியாக நறுக்கி மேலே அலங்காரத்திற்காக எடுத்து வைக்கவும்.  ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் மைதா, அரை‌ கப் சர்க்கரை, அரை கப் நெய் சேர்த்து கலந்து பேக்கிங் சோடா கால் ஸ்பூன், உப்பு 2 சிமிட்டு, காய்ச்சி ஆறிய பால்  2 கரண்டி விட்டு நன்கு கலந்து விடவும். கடைசியாக துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு கலந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி வட்ட வடிவமாக செய்து ஓரங்களை நன்கு அழுத்தி விடவும். இது பார்ப்பதற்கு நடுவில் உப்பலாகவும் ஓரங்கள் மெலிந்தும் இருக்கும். இப்படி எல்லாவற்றையும் பிஸ்கட்களாக செய்து வைத்துக் கொள்ளவும். அகலமான தட்டு ஒன்றை எடுத்து அதில் நெய் தடவி தட்டி வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஐந்து அல்லது ஆறு வைத்து பிஸ்கட்டின் நடுப்பகுதியில் பொடியாக நறுக்கிய தேங்காய் பற்களை வைத்து சூடாகிக் கொண்டிருக்கும் அடி கனமான வாணலியின் உள்ளே உள்ள ரிங்கின் மேல் வைத்து மூடி 30 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.

மணக்க மணக்க மிகவும் ருசியான தேங்காய் பிஸ்கட் ரெடி.

ஓமப்பொடி:

கடலை மாவு ஆழாக்கு 

அரிசி மாவு 2 ஸ்பூன்

ஓமம் 1 ஸ்பூன்

(ஓமத்தை வறுத்து பொடித்து சேர்க்கவும்) 

உப்பு சிறிது

நெய் நெய் 2 ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி

கருவேப்பிலை சிறிது அலங்கரிக்க 

கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த ஓமம், தேவையான உப்பு, நெய் சிறிது சேர்த்து ஒன்றாகக் கலந்து தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுக்க ஓமப்பொடி தயார். கடைசியாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலை,கருவேப்பிலையை எண்ணெயில் பொரித்து மேலே தூவ மிகவும் சுவையான கண்ணுக்கு விருந்தான ஸ்னாக்ஸ் தயார்.

டீ கடை கஜரா:

 மைதா மாவு ஒரு கப் 

அரிசி மாவு 2 ஸ்பூன் 

ரவை 2 ஸ்பூன்

காய்ச்சாத பால் அரைக்கப் 

எண்ணெய் 4 ஸ்பூன்

உப்பு இரண்டு சிமிட்டு 

எண்ணெய் பொரிக்க

சர்க்கரை அரை கப் 

ஏலக்காய் 4

சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். இதில் அரை கப் காய்ச்சாத பால், எண்ணெய் 4 ஸ்பூன் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும். பிறகு அதில் ஒரு கப் மைதா மாவு, 2 ஸ்பூன் அரிசி மாவு, ரவை சேர்த்து ரெண்டு சிமிட்டு உப்பும் போட்டு பிசையவும். இதனை அரை மணி நேரம் துணி போட்டு மூடி ஊற விடவும். ஊறிய மாவை கையில் தண்ணீர் தொட்டு சிறிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நான்கு நான்காக போட்டு இரண்டு பக்கமும் நன்கு பொரிந்து சிவந்து வந்ததும் எடுத்துவிட மிகவும் ருசியான  டீக்கடை கஜரா ரெடி.

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

SCROLL FOR NEXT