பருப்பரசி இனிப்பு உப்புமா www.youtube.com
உணவு / சமையல்

இதோ சுவையான பருப்பரிசி இனிப்பு, கார உப்புமா!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

பருப்பரசி இனிப்பு உப்புமா

பச்சரிசி ஒரு கப் 

பயத்தம் பருப்பு கால் கப் 

வெல்லம் 11/2  கப் 

தேங்காய் துருவல் 1/2 கப் 

ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன் 

முந்திரி பருப்பு 20 

நெய் 1/4 கப்

பச்சரிசி பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக அடிகனமான வாணலியில் பொன் கலரில் வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் போட்டு நைஸ் ரவையாக பொடித்து எடுக்கவும். அடி கனமான வாணலியில் பொடித்த வெல்லத்தை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு நன்கு கரைந்து கொதி வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து கல் மண் தூசி இன்றி வடிகட்டிக் கொள்ளவும்.

இப்பொழுது வடிகட்டிய வெல்லத் தண்ணீரை திரும்பவும் அடுப்பில் வைத்து நடுக் கொதி வந்ததும் பொடித்து வைத்துள்ள அரிசி பருப்பு ரவையை சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும். நான்கு விசில் வந்ததும் அடுப்பை சிறியதாக்கி ஐந்து நிமிடம் வைத்து அணைத்து விடவும். நெய்யில் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து வறுத்து வைக்கவும். ஏலக்காயை பொடி செய்யவும். குக்கரை திறந்து வறுத்த முந்திரி தூண்டுகளை நெய்யுடன் சேர்த்து ஏலப்பொடியும் போட்டு கிளறி விட மிகவும் சுவையான  பருப்பரசி இனிப்பு உப்புமா தயார்.

இதனை தேங்காய் சட்னியுடன் காலை அல்லது இரவு உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

பருப்பரசி கார உப்புமா

பருப்பரசி கார உப்புமா

பச்சரிசி ஒரு கப் 

பயத்தம் பருப்பு கால் கப் 

மிளகாய் வற்றல் 4

இஞ்சி ஒரு துண்டு 

பச்சை மிளகாய் 2

தேங்காய் துருவல் ஒரு கப் 

உப்பு தேவையானது 

பெருங்காயத்தூள் சிறிது

தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, நல்லெண்ணெய் 4 ஸ்பூன்

அரிசி, பருப்பு இரண்டையும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் போட்டு நைஸ் ரவையாக பொடிக்கவும். மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் 2,காய்ந்த மிளகாய் 4 ஆகியவற்றை சேர்த்து நீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து மூன்று கப் தண்ணீர் விட்டு நடுக் கொதி வந்ததும் பொடித்து வைத்துள்ள அரிசி பருப்பு கலவையை சேர்த்து தேவையான உப்பு, கரகரப்பாக அரைத்து வைத்துள்ள தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் கலவையை சேர்த்து பெருங்காயத்தூள் அரை ஸ்பூன் போட்டு கலந்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் அணைத்து விட ருசியான பருப்பரசி கார உப்புமா ரெடி.

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

SCROLL FOR NEXT