Kadapa Chutney: Sema combination for Idli.
Kadapa Chutney: Sema combination for Idli. 
உணவு / சமையல்

கடப்பா சட்னி: இட்லிக்கு செம காம்பினேஷன்!

கிரி கணபதி

ட்லிக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்தால், கடப்பா சட்னி இப்படி வித்தியாசம் முறையில் செய்து பாருங்கள், ருசி அட்டகாசமாக இருக்கும். 

இந்த சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: 

ஞ்சி, பூண்டு, எள், தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, உப்பு, கொத்தமல்லி, கடலை எண்ணெய், கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் சீரகம். 

செய்முறை: 

முதலில் சூடான வானலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் இரண்டு ஸ்பூன் எள் சேர்த்து நன்றாக வறுக்கவும். பின்னர் அதில் ஆறு முதல் ஏழு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் காலத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயின் அளவை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் அதில் இரண்டு துண்டு இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி வாடை போய் மசாலா வாசனை வர ஆரம்பித்ததும், அரை முடி தேங்காய், கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அத்துடன் தேவையான உப்பை சேர்த்து வதக்கிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது வதக்குவதற்கு பயன்படுத்திய அதே கடாயில் தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளியையும் மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக அரைத்து வேறு பாத்திரத்தில் அதை மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் தாலிப்பு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சட்னியை தாளிக்க வேண்டும். 

அவ்வளவுதான் சுவையான காரசாரமான கடப்பா சட்னி தயார். இந்த காம்பினேஷன் இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும். இதை தோசைக்கு சப்பாத்திக்கும் கூட பயன்படுத்தலாம். இது ஆந்திரா வகை உணவு என்பதால் காரம் சற்று அதிகமாக இருந்தாலும் சுவை நன்றாக இருக்கும்.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT