சமோசா... 
உணவு / சமையல்

கிக்கான கிங் சமோசா செய்யலாம் வாங்க!

சேலம் சுபா

னைவருக்குமே சமோசா சாப்பிடுவது என்றால் கொள்ளை பிரியம். ஆனால்  முக்கோண வடிவில் அழகாக இருக்கும் அதை வீட்டில் செய்ய சோம்பல்பட்டு  கடைகளிலே வாங்கி இரண்டு சாப்பிட்டுவிட்டு ஆசையை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் வீட்டில் நாமே சுகாதாரமாக செய்து தந்தால் குழந்தைகள் முதல் அனைவரும் இன்னும் இரண்டு சேர்த்து சாப்பிடலாம். கிங் சமோசாவில் பட்டாணி, உருளைக்கிழங்கு, சீரகம், இஞ்சி, முந்திரி பருப்பு போன்றவைகள் சேர்ப்பதால் நல்ல நல்ல ஹைஜீனிக் ஃபுட் அதாவது சத்து மிகுந்த ஒரு பலகாரமாகவே இருக்கும் என்பது உண்மை. வாங்க கிங் சமோசா அதாவது சமோசாக்களின் ராஜாவை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மல்லி இலை - சிறிது
முந்திரி பருப்பு - 10
சீரகம்-  அரை தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு - 4
பச்சை பட்டாணி - 100 கிராம்
கடலை எண்ணெய் - தேவைக்கு
இஞ்சி - சிறு துண்டு
கரம் மசாலா-  1 டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை-  15
எலுமிச்சை சாறு- 1/4 டீஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும். அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, தேவையான உப்பு, துருவிய இஞ்சி, கரம் மசாலா, வேகவைத்த பட்டாணி, பொடித்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை மல்லித்தழை, நறுக்கிய மிளகாய், சிறிது எலுமிச்சைசாறு எல்லாவற்றையும் கலந்து வாணலியில் ஒரு மேஜைக் கரண்டி எண்ணெய் விட்டு சீரகத்தை பொரித்து கலவையை நன்கு  வதக்கி பின்னர் ஆற வைக்கவும்.

மைதா மாவை சலித்து இரண்டு மேஜைக் கரண்டி எண்ணெய் , தேவையான உப்பு, தண்ணீர்விட்டு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை  சப்பாத்திகளாக இட்டு ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் தண்ணீர் தொட்டு ஓரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு  எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதுவே கிங் சமோசா ஆகும்.


குறிப்பு- இதில் மைதாமாவுக்கு பதில் கோதுமை மாவையும் சேர்க்கலாம். கடலை இன்னைக்கு பதில் ரீபண்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சைசாறு தேவை என்றால் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும். அதேபோல் மாவுக்கு சிறிது சர்க்கரையையும் சேர்த்து பிசைந்தால் குழந்தைகள் விரும்புவார்கள்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT