Vendakkai Thuvaiyal and Murungai poo egg poriyal recipes Image Credits: ABP Nadu- ABP News
உணவு / சமையல்

டேஸ்டியான வெண்டைக்காய் துவையல் - முருங்கைப்பூ முட்டை பொரியல் செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

சாதத்திற்கு தொட்டுக்கொள்ள டேஸ்டியான வெண்டைக்காய் துவையல் மற்றும் முருங்கைப்பூ முட்டை பொரியல் ஆகியவற்றை எப்படி சிம்பிளாகவும், ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

வெண்டைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்;

வெண்டைக்காய்-2 கப்.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

சின்ன வெங்காயம்-5

பெரிய வெங்காயம்-1

வரமிளகாய்-2

புளி-எழுமிச்சை அளவு.

பூண்டு-10

தேங்காய்-5 துண்டு.

உப்பு- சிறிதளவு.

கடுகு-1/4 தேக்கரண்டி.

உளுந்து-1/4 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

வெண்டைக்காய் துவையல் செய்முறை விளக்கம்;

முதலில் வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  இப்போது ஒரு ஃபேனில் எண்ணெய் சிறிது ஊற்றி கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் 5, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, வரமிளகாய் 2, புளி எழுமிச்சை அளவு, பூண்டு 10 சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி அதில் சிறிதாக வெட்டி வைத்த வெண்டைக்காய் 2 கப்பை சேர்த்து நன்றாக வதக்கி அதையும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டோடு சேர்த்து தேங்காய் 5 துண்டு, உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு ¼ தேக்கரண்டி, உளுந்து ¼ தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 2 நிமிடம் கிண்டியிறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் துவையல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிப்பியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.

முருங்கைப்பூ முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்;

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

முருங்கைப்பூ-2கப்.

வெங்காயம்-1

வரமிளகாய்-2

முட்டை-2

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

முருங்கைப்பூ முட்டை பொரியல் செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

இப்போது முருங்கைப்பூ 2கப் சேர்த்துக் கொள்ளவும் இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். முருங்கைப்பூ நன்றாக வதங்கியதும் முட்டை 2 சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார். நீங்களும் வீட்டில் இந்த சுவையான ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

பயணம்; நான் ரசித்த அழகிய தாஜ்மஹால்!

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

SCROLL FOR NEXT