இன்றைக்கு சுவையான தால் கிச்சடி மற்றும் டேஸ்டியான வெஜிடபிள் துவையல் ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தால் கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்.
நெய்- 2 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
பிரிஞ்சி இலை-1
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-1
வரமிளகாய்-2
வெங்காயம்-1
தக்காளி-1
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.
மிளகாய்தூள்-1/2 தேக்கரண்டி.
தனியா தூள்-1 தேக்கரண்டி.
பாசிப்பருப்பு-1/4கப்.
துவரம் பருப்பு-1/2 கப்.
கல் உப்பு-1 தேக்கரண்டி.
பாஸ்மதி அரிசி-1 கப்.
கொத்தமல்லி-சிறிதளவு.
தால் கிச்சடி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய், சீரகம் 1 தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1 சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து தூளாக நறுக்கி வைத்த இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 1, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
நன்றாக வதங்கியதும் பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி, சீரகத்தூள் ½ தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி போட்டு வதக்கிய பிறகு ¼ கப் பாசிப்பருப்பு மற்றும் ½ கப் துவரம் பருப்பை 3 கப் தண்ணீர் விட்டு வேகவைத்து இத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.
நன்றாக கலந்து விட்டு 2 கப் தண்ணீர் விட்டு 1 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக்கொள்ளவும். பருப்பு ஒரு கொதி வந்ததும் இதில் வேகவைத்து வைத்திருக்கும் 1 கப் பாஸ்மதி அரிசியை இதில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதை 20 நிமிடம் மூடிப்போட்டு வேகவைக்கவும். கடைசியாக சாதம் நன்றாக குழைந்து வந்த பிறகு 1 தேக்கரண்டி நெய், கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான். சுவையான தால் கிச்சடி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வெஜிடபிள் துவையல் செய்ய தேவையான பொருட்கள்.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
உளுந்து-4 தேக்கரண்டி.
இஞ்சி-2 துண்டு.
பச்சை மிளகாய்-3
வரமிளகாய்-3
புளி-எழுமிச்சை அளவு
வெங்காயம்-1
தக்காளி-1
சௌசௌ-1/2 கப்.
பீன்ஸ்-1/2 கப்.
கேரட்-1/2 கப்.
மஞ்சள் பூசணி-1/2 கப்.
முள்ளங்கி-1/2 கப்.
குடை மிளகாய்-1/2 கப்.
முட்டைகோஸ்-1/2 கப்.
கத்தரி-1/2 கப்.
தேங்காய்-1 கப்.
கொத்ததல்லி-1 கைப்பிடி.
கருவேப்பிலை-சிறிதளவு.
உப்பு-1 தேக்கரண்டி.
வெஜிடபிள் துவையல் செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து 4 தேக்கரண்டி உளுந்து, 2 துண்டு இஞ்சி, 3 பச்சை மிளகாய், 3 வரமிளகாய், எழுமிச்சை அளவு புளி, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து இதில் ½ கப் நறுக்கிய சௌசௌ, முள்ளங்கி 1/2கப், பீன்ஸ் ½ கப், கேரட் ½ கப், மஞ்சள்பூசணி ½ கப் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இப்போது முட்டைகோஸ் ½ கப், குடைமிளகாய் ½ கப், கத்தரி ½ கப், நறுக்கிய தக்காளி 1 சேர்த்து 10 நிமிடம் வதக்கிக்கொள்ளவும். கடைசியாக தேங்காய் 1 கப் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வாசனைக்கு 1 கைப்பிடி கொத்தமல்லி, கருவேப்பிலை சிளிதளவு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இத்துடன் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் துவையல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.