healthy recipes image credit - youtube.com
உணவு / சமையல்

தீபாவளி ஸ்பெஷல் ரவா அதிரசம் - காராசேவு செய்யலாமா?

நான்சி மலர்

ன்றைக்கு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிஸ் ரவா அதிரசம் மற்றும் காரசாரமான காராசேவு வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம்னு பார்ப்போம்.

ரவா அதிரசம்  செய்ய தேவையான பொருட்கள்;

தண்ணீர்-2 கப்.

நெய்-1 தேக்கரண்டி.

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

சர்க்கரை-1கப்.

ரவை-1 கப்.

எண்ணெய்- தேவையான அளவு.

ரவா அதிரசம் செய்முறை விளக்கம்;

முதலில் ஃபேனில் 2 கப் தண்ணீர் விட்டு அதில் 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி, 1 தேக்கரண்டி நெய், 1 கப் சர்க்கரை சேர்த்து கரையவிடவும்.

இப்போது இதில் 1 கப் வறுத்து வைத்த ரவையை சேர்த்துக்கொள்ளவும். நன்றாக மூடிப்போட்டு பாதி வேக வைக்கவும். இப்போது மாவை ஒரு தட்டில் மாற்றிக்கொண்டு அதில் 1 தேக்கரண்டி நெய்விட்டு பிசைந்துக்கொள்ளவும்.

இப்போது மாவை ஒரு இலையில் சிறிது சிறிதாக வைத்து அதிரசம் போல தட்டி எண்ணெய்யை கொதிக்கவிட்டு அதில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ரவா அதிரசம் தயார். நீங்களும் தீபாவளிக்கு இந்த ரெசிபியை வீட்டிலே செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

காராசேவு செய்ய தேவையான பொருட்கள்;

கடலை மாவு-2 கப்.

அரிசி மாவு-1/2 கப்.

உப்பு-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

சூடான எண்ணெய்-1 தேக்கரண்டி

கருவேப்பிலை-1 கைப்பிடி.

எண்ணெய்- தேவையான அளவு.

காராசேவு செய்முறை விளக்கம்;

முதலில் பவுலில் 2 கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக சலித்து விட்டு எடுத்துக்கொள்ளவும். இப்போது 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகத்தை நன்றாக இடித்து இத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.

அத்துடன் ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.

சூடாக இருக்கும் எண்ணெய் ½ கரண்டி மாவுடன் கலந்துவிட்டுக் கொண்டு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மாவை பிசைந்து எடுத்துக்கொள்ளலாம்.

முறுக்கு பிழியும் அச்சிலேயே எண்ணெய்யை தடவிக் கொண்டு சிறிது மாவை உள்ளே வைத்து சூடான எண்ணெய்யில் பிழிந்து விட்டு நன்றாக மொறு மொறு வென்று பொரித்து எடுத்துக்கொள்ளலாம். அதே எண்ணெய்யில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது காராசேவை நன்றாக நொறுக்கிவிட்டு அதில் பொரித்த கருவேப்பிலையை சேர்த்து கலந்துவிடவும். அவ்வளவு தான் சுவையான காராசேவு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT