இன்றைக்கு வேற லெவல் டேஸ்டில் வேர்க்கடலை சட்னி மற்றும் கேரட் தொக்கு ரெசிபிஸை வீட்டிலேயே சிம்பிளா எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்;
நெய்-1 தேக்கரண்டி.
வேர்க்கடலை-100 கிராம்.
பொட்டுக்கடலை-2 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
புளி-சிறிதளவு.
தேங்காய்-1 கைப்பிடி.
உப்பு-தேவையான அளவு.
தாளிக்க,
எண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1தேக்கரண்டி.
வரமிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்;
முதலில் ஃபேனில் 1 தேக்கரண்டி நெய்விட்டு அதில் 100 கிராம் தோல் நீக்கிய வேர்கடலை, 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை, 2 வரமிளகாய், புளி சிறிதளவு சேர்த்து வதக்கிவிட்டு, ஒரு கைப்பிடி தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும். இப்போது இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கடைசியாக எண்ணெய் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து சட்டியில் கலந்துவிடவும். அவ்வளவுதான் டேஸ்டியான வேர்க்கடலை சட்னி தயார். இட்லி, தோசை, இடியாப்பம்,சப்பாத்தின்னு எதுக்கூட வேணுமோ ஈஸியா இந்த ரெசிபியை செய்து சைட்டிஷ்ஷாக சாப்பிடலாம். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கேரட் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்;
கேரட்-2
பூண்டு-3
வரமிளகாய்-3
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
மஞ்சள் பொடி-1/4 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
நெய்-2 தேக்கரண்டி.
கேரட் தொக்கு செய்முறை விளக்கம்;
முதலில் 2 கேரட்டை நன்றாக துருவி எடுத்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் 3 பூண்டையும் இடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது ஃபேனில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு 3 வரமிளகாய், இடித்து வைத்த பூண்டை சேர்த்து நன்றாக வறுத்துவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துவிட்டு அத்துடன் சீவி வைத்திருக்கும் கேரட்டை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக பொரிந்ததும் அரைத்து வைத்திருக்கும் கேரட் மசாலாவை சேர்த்து அத்துடன் மஞ்சள் பொடி ¼ தேக்கரண்டி, பெருங்காயத்தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிவிட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு எடுத்தால் அல்டிமேட் டேஸ்டில் கேரட் தொக்கு தயார். தோசை,சாதம் கூட சேர்த்து சாப்பிட்டு பாருங்க செமையா இருக்கும். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.