இன்றைக்கு சுவையான மசாலா பொரி மற்றும் ரோட்டுக்கடை பேமஸ் Egg bejo ரெசிபிகளை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
மசாலா பொரி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் -1 தேக்கரண்டி.
கடுகு- 1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
பொட்டுக்கடலை-2 தேக்கரண்டி.
கடலை-2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
சாட் மசாலா-1/2 தேக்கரண்டி.
பொரி-1 பாக்கெட்.
வெங்காயம்-1
கொத்தமல்லி-சிறிதளவு.
மசாலா பொரி செய்முறை விளக்கம்:
முதலில் கடாயில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் 1 தேக்கரண்டி கடுகு, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து கிண்டிவிட்டு அத்துடன் பொட்டுக் கடலை 2 தேக்கரண்டி, கடலை 2 தேக்கரண்டி நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
இப்போது பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பை ஆப் செய்துவிட்டு இதில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து விட்டு 1 பாக்கெட் பொரியை சேர்க்கவும்.
பொரியை நன்றாக கலந்துவிட்டு இத்துடன் ½ தேக்கரண்டி சாட் மசாலாவை சேர்த்து கலந்துவிடவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து மேலே தூவி விட்டு தட்டில் வைத்து பரிமாறவும். அவ்வளவு தான். மசாலா பொரி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
Egg bejo செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு-5
வெங்காயம்-1
முட்டை-3
சில்லி பிளேக்ஸ்-1 ½ தேக்கரண்டி.
எழுமிச்சை சாறு-1தேக்கரண்டி.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
புளி தண்ணீர்-1 தேக்கரண்டி.
உப்பு கலந்த தண்ணீர்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
பொரிக்க எண்ணெய்- தேவையான அளவு.
Egg bejo செய்முறை விளக்கம்:
முதலில் 5 பூண்டை சின்னதாக மெலிதாக வெட்டி எண்ணெய்யில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே எண்ணெய்யில் நீளமாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் வறுத்து எடுத்த வெங்காயம், பூண்டை சேர்த்து அத்துடன் 1 ½ தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ் சேர்த்துக்கொள்ளவும். இப்போது இவை அனைத்தையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது வேக வைத்த முட்டை ஒன்றை எடுத்து நடுவிலே பாதி கீறிவிட்டு அதனுள் செய்து வைத்திருக்கும் கலவையை ஸ்டப் செய்யவும். இதில் இப்போது 1 தேக்கரண்டி எழுமிச்சை சாறு சேர்க்கவும், 1 தேக்கரண்டி எண்ணெய், 1 தேக்கரண்டி புளி தண்ணீர், 1 தேக்கரண்டி உப்பு கலந்த தண்ணீரை சேர்க்கவும். இப்போது அதுமேலே கொத்தமல்லி தூவி விடவும். இதேபோல மற்ற முட்டை களிலும் ஸ்டஃப் செய்து தட்டிலே வைத்து பரிமாறவும். அவ்வளவு தான். சுவையான ரோட்டுக்கடை பேமஸ் Egg bego தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.