இலை வடாம்... grocerynxt.com
உணவு / சமையல்

பாரம்பரிய இலை வடாம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

லை வடாம் செய்ய குறைந்த பொருட்களே தேவை. அத்துடன் இந்த வடாமை காய வைக்க வெயில் தேவையில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள், வெயில் அதிகம் வராத இடத்தில் வசிப்பவர்கள் இந்த வடாமை செய்யலாம். நன்கு காய வைத்து பத்திரப்படுத்தி வைக்க, ஒரு வருடம் ஆனாலும் கெடாது. ருசியும் அதிகம் எண்ணெயும் அதிகம் குடிக்காது.

பச்சரிசி 2 கப் 

உப்பு சிறிது 

சீரகம் ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் 4

வாழை இலை துண்டுகள் 4

டைகளில் மாவரிசி என்று கேட்டால் கிடைக்கும். அந்த மாவு பச்சரிசியை வாங்கி களைந்து மூன்று மணி நேரம் ஊற விடவும்‌. பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்து எடுக்கவும். மிக்ஸி ஜாரில் நான்கு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து மாவில் சேர்த்து 6 மணி நேரம் நன்கு புளிக்க விடவும்.

நன்கு புளித்ததும் ஒரு ஸ்பூன் சீரகம் கலந்து வாழையிலை துண்டுகளில் பின்புறம் ஒரு கரண்டி அளவு மாவு எடுத்து பூரி சைசுக்கு மெல்லியதாக தேய்த்து இட்லி பானையில் வைத்து வேக விடவும். 

ஒரே நிமிடத்தில் வெந்துவிடும். அதனை மெதுவாக எடுத்து ஃபேன் அடியிலோ, பால்கனியிலோ காட்டன் துணி விரித்து அதில் ஒன்றின் மேல் ஒன்று படாமல் பரப்பி விட இரண்டே நாட்களில் நன்கு காய்ந்து விடும். மேக்ஸிமம் மூன்றே நாட்களில் காய்ந்து விடும்.

வாழையிலை துண்டுகளை நன்கு அலம்பி ஈரம் போகத் துடைத்து வைத்துக்கொண்டு அதன் பின்புறத்தில் இலை வாடாம்களை எழுத வேண்டும். காரணம் உள் பக்கத்தில் எழுதினால் மேடு பள்ளமாகவும், வரி வரியாக கோடுகளாக தெரியும். எனவே வாழை இலையின் பின்பக்கம் எழுத வேண்டும்.

இலை வடாம்களை ஈரம் படாத டப்பாக்களில் சேமித்து வைக்க ஒரு வருடம் ஆனாலும் கெடாது. எண்ணெயில் பொரிக்க நன்கு வீசி பொரியும். செய்வதும் எளிது. ருசியும் அதிகம். கடைகளில் வாங்கினால் அதில் சோடா உப்பு கலந்திருக்கும். வீட்டில் செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

SCROLL FOR NEXT