milk sweets Image credit - pixabay
உணவு / சமையல்

மராட்டிய மாநில ஸ்பெஷல் சீம்பால் கார்வாஸ்!

மும்பை மீனலதா

சீம்பால் குறித்து அநேகருக்குத் தெரியாது. மிகவும் புரதசத்து நிறைந்தது. கொழுப்பு சக்தியும் குறைவு. பசுமாடு கன்று  ஈன்பதற்கு முன்பும், ஈன்ற பிறகும் சுரக்கும் பால் சீம்பாலாகும். இதன் விலை அதிகமாகும். இதை வைத்துதான் "கார்வாஸ்" தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

சீம்பால்    750 மில்லி

பசும்பால் பால்  250 மில்லி

சர்க்கரை  3 கப்

ஏலக்காய் 5

சுக்கு    ஒரு சிறு துண்டு

மிளகு       1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, மிளகு, ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இது ஒரு கலவை போல இருக்கும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் சீம்பால் மற்றும் பசும்பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பாலில்  அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பாலை  ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து ஊற்றி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், வடிகட்டியதை  ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவியில் சுமார் 20 நிமிடம் வரை ஒரு சின்ன பாத்திரத்தில் ஊற்றி வேகவைக்கவும். பால் வெந்த பிறகு அதை முழுவதுமாக ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய பிறகு,  நமக்கு  பிடித்த வடிவில் கட் செய்து,  முந்திரி பிஸ்தா அல்லது பாதாம் பருப்புகளை பொடி செய்து இதன் மீது பரவலாக தூவிவிட்டால் டேஸ்ட் அருமையாக இருக்கும். மிகவும் சத்தான, மிருதுவான மகாராஷ்டிரா ஸ்வீட்டாகிய கார்வாஸை,  தீபாவளிக்கு  வீட்டில் செய்யலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  புதுமாதிரியான இந்த கார்வாஸ்  ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமேரிக்கா!

ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தால் 160 பேர் பலி!

விராட் கோலி - மேக்ஸ்வெல்: நெருங்கிய நண்பர்கள் ஆனது எப்படி தெரியுமா?

சரும தழும்புகளை எளிதாக போக்க சில வழிகள்!

இன்று ஒடிடியில் வெளியான படங்கள்!

SCROLL FOR NEXT