டோக்ளா ... Image credit - amazon.in
உணவு / சமையல்

குஜராத்தி ஸ்பெஷல் டோக்ளா செய்து அசத்தலாம் வாங்க!

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி ஒரு கப்

உளுந்து ஒரு கப்

கடலை பருப்பு 1 கப்

வெந்தயம் சிறிது

மிளகு

மஞ்சள்

இஞ்சி

பூண்டு

பச்சை மிளகாய்

சமையல் சோடா

காயம் கடுகு

மல்லி தூள்

தேங்காய் பூ

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதல் நாள் பச்சரிசி ஒரு கப். உளுந்து ஒரு கப். கடலைப்பருப்பு வெந்தயம், மிளகு, சீரகம், மஞ்சள் உப்பு சேர்த்து தோசைக்கு அரைப்பதுபோல் அரைத்து வைத்து விடவும். மறுநாள் இஞ்சிப்பூண்டு, பச்சைமிளகாய் இரண்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்து வைத்த மாவை எடுக்கவும் மாவுடன் அரை ஸ்பூன் அல்லது கரண்டி சோடா மாவு கலந்து நன்றாக அடித்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.அந்த மாவு கலவையை அகலமான தட்டில் எண்ணெய் தடவி மாவை கொட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்னர், அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பெரிய தட்டை கொண்டு மூட வேண்டும். மூடிய தட்டின் மீது மாவை ஊற்றிய கலவைத் தட்டை வைத்து அதன் மீது கணத்த துண்டினை போற்றி மூடிவிட வேண்டும். பின் வெந்து ஆரிய பின் அதனை துண்டு துண்டாக கட் பண்ணி விடவும். இன்று தாளிப்பதற்கு நான்கு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, காயம், கருவேப்பிலை மல்லித்தூள் ,தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு சிறிதளவு ஊற்றி சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளலாம். தேவையில்லை காரமாக சாப்பிட விரும்புபவர்கள் சீனியை தவிர்த்துக் கொள்ளலாம். தாளித்ததை கட் பண்ணி வைத்த டோக்ளா உடன் போட்டு குலுக்கி கிளறவும்.

இதனுடன் புதினா சட்னி தயார் செய்து சாப்பிடவும். இப்பொழுது நீங்கள் எதிர்பார்த்த குஜராத் டோக்ளா ரெடி.

பார்த்ததைப் பகிருங்கள் ரசித்ததை ருசியுங்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT